பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


வென்று விழித்தபடியே இருக்கும், என்ன செய்வது? நடிப்பாசிரியருக்குக் கண்வலி கண்டுவிடும். வேறு வழி: “அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்”

“எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்’ அதில் முக்கிய உறுப்பு கண். நடிப்பில் உயிர் வேண்டுமா? பாவம் கண்களில் தெரிய வேண்டும். விருப்பையும் வெறுப்பையும் கண்கள் காட்டிவிடும். பகைமையை யும் கேண்மையையும் கண்ணுரைக்கும்’ என்கிறார் வள்ளுவர். அவா எதைத்தான் சொல்லவில்லை: கண் களில பாவம் காட்டாமல நடிப்பது மகாபாவம் அந்த கடிகனைப் பார்க்க உங்களுக்கும் பாவமாயிருக்காதா?

பாத்திரமாக மாறலாமா?

மேடையில் கடிகன் பாத்திரமாகவே மாறிவிட வேண்டும் என்று உங்களில் சிலர் சொல கிறீர்களே! அது ரொம்ப அபாயம், சுவாமி f

எங்கள் நாடகங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? முதல் காட்சிக்குப் பின் இடைவேளை வரை காட்சிகள் மாறும். இடைவேளைக்கப்புறம் முடிவு வரை அப்படித் தான் மாறிக் கொண்ட போகும். ஒத்திகைப்படி கடந்து கொள்ள வேண்டியது கடிகனுடைய பொறுப்பு. திரை விழும் இடம், காட்சி மாறும் இடம் இதையெல்லாம் மறந்து பாத்திரமாகவே மாறிவிட்டானே, தொலைந்தான் கடிகன்! சுருண்டு விழும் திரை தலையைத் தாக்கும். நகர்ந்து வரும் தட்டி முகத்திலிடிக்கும். அடுத்த கிமிடம் மருத்துவமனைக்குப் போக வேண்டியதுதான். இப் போது சொல்லுங்கள் நாங்களெல்லாம் பாத்திரங் களாகவே மாறவேண்டுமா?