பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


தொங்க விட்டிருப்பார்கள். அந்த வெளிச்சத்தில்தான் நாடகங்கள் நடைபெற்றன. அந்த நாளில் பொது மக்கள் எப்படி நாடகங்களைப் பார்த்து கடிப்பை ரசித் தார்கள் என்பதை இன்று எண்ணிப் பார்த்தால் வியப் பாகத்தான் இருக்கிறது.

கண்களின் கூர்மையோ?

இதில் மற்றாெரு வேடிக்கை. காட்டுத்திரையைவிடும் போது இந்த மூன்று கியாஸ் விளககுகளில முன்னல் தொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு விளக்குகள் அதே போன்று ஒரு சட்டத்தில் கட்டித் தொங்கவிடப்பட் டிருக்கும் அட்டைகளால் மேடையில் வெளிச்சம் தெரியாதபடி மறைத்துவிடுவோம். காட்டில் காட்சிகள் கடைபெறும்போது அதிக வெளிச்சம் இருக்கக் கூடா தல்லவா? அதுதான் எங்கள் எண்ணம். இதையெல்லாம் அன்று ஆயிரக கணக்கான மக்கள் பார்த்தார்கள்; ரசிக்கவும் செய்தார்கள். ஒரு வேளை அந்த காளில் கம் கண்களுக்கு இப்போது இருப்பதை விட அதிகமான வலிமையும் கூர்மையும் இருந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை!

இவ்வாறு குறைவான வெளிசசத்தில காடகங்கள் கடைபெற்ற அகத நாளில் அங்க அசைவுகளை அதிக மாகக் காட்டி கடிக்கவேண்டிய அவசியம் இருந்தது. நடிகன் கண்களிலோ, முகத்திலோ காட்டும் உணர்ச்சி வேறுபாடுகள் சபையோருககுத் தெரியாது. அதன் காரணமாகக் குரலிலும் அங்க அசைவுகளிலும் உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய கிர்ப்பந்தம் கடிகர் களுக்கு இருந்தது. அந்த அளவுக்கு இல்லையென்றாலும்