பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


யும் பொறுத்திருக்கிறது என்பதைக் குறிப்பிட விரும்பு .கிறேன்.

இப்போது மேடையில் போடும் வெளிச்சம் கடிக ன்ரின் கண் அசைவைக்கூட சுமார் ஐம்பது, அறுபது அடி துரம் வரையில்-சில சமயங்களில் அதற்கு மேலும் தெளிவாகக் காட்டும். பகைமையும் கேண்மை யும் கண்ணுரைக்கும்’ என்று வள்ளுவப் பெருந்தகை யார் கூறியிருப்பதற் கொப்ப, பகை உணர்வையும் கட்புணர்வையும் கண்களிலேயே காட்டலாம். அங்கங் களை அதிகமாக அசைத்து கடிக்க வேண்டியதில்லை. ஆல்ை இதை எல்லா அரங்குகளிலும், எல்லா நகரங்களி லும் பின்பற்ற முடிவதில்லை. ஆயிரம் பேர் அமர்க் திருக்கக்கூடிய திறந்த வெளி அரங்குகளிலே கடிக்க வேண்டிய முறை வேறு, ஐயாயிரம் பேர் அமர்க் திருக்கக் கூடிய திறந்த வெளி அரங்குகளிலே கடிக்க வேண்டிய முறை வேறு. இதை நடிகர்கள் புரிந்து கொண்டால்தான் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

திரைப்படங்களின் வசதி

முன்னலிருந்து பார்க்கும் ரசிகர்களுக்கு நடிகர் களின் முகபாவம் தெரியும். பின்னல் தூரத்திலிருப்ப வர்கள் கடிகன் அசையாமல் கிற்பதாக எணணுவார்கள் னைவே கைகால்களே அசைத்து கடிகர்கள் தங்கள் உணர்ச்சிகளைக் காட்ட வேண்டும்.

திரைப்படங்களில் சந்தர்ப்பங்களுக கேறறவாறு ‘குளோஸ்-அப் எடுத்து பெரிய உருவமாகத் திரையில் காட்டிவிடுகிறார்கள். நாடக மேடையில் அப்படிச் செய் வது இயலாது. கடிகன், கை கால்களை அதிகமாக அசைப்பது முன்னல் இருக்கும் ரசிகர்களுக்கு மிகை