பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தொகுப்புரை

தமிழ் நாடக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு ஒரு திருப்புமுனையாகும். நாடகத் தமிழுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்துவரும் நூற்றாண்டு இது முத்தமிழ் என்ற உண்மையை முழுமையாக்கிய இந்தக் காலக் கட்டத்தில் தம் வாழ்நாள் முழுவதையும் நாடகக் கலைக்கே உரிமை யாக்கியவர் முத்தமிழ்க் கலா வித்வ ரத்தினம் திரு. அவ்வை தி. க சண்முகம் அவர்கள் என்பதைக் கலையுலகம் நன்கு அறியும்.

ஆரும் வயதில் அபிமன்யுவாக வீரநடை போட்டது முதல், தம் இறுதிக் காலம்வரை-ஏறக்குறைய ஐம்பத்தைந்து ஆண்டுகள்-நாடகச் சிந்தனையிலேயே ஊறித் திளைத்தவர் ஓயாது உழைத்தவர்-திரு. சண்முகம். அவரது சிந்தனையிலே பூத்த கருத்து மலர்கள் எண்னற்றவை. காலமெல்லாம் வாடாது கலைமணம் பரப்பும் சிறப்பு வாய்ந்தவை. அந்தத் தேன் மலர்களில், வானெலியிலும் பிற வகையிலும் பூத்துக் குலுங்கிய பன்னிரு கட்டுரைகளின் தொகுப்பே ‘நாடகச் சிந்தனைகள்’ என்னும் நூலாக வெளியாகிறது.

திரு. அவ்வை சண்முகம் அவர்களின் கலைவாழ்வில் பலகாலம் நிழலாகப் பழகும் நட்புறவு பெற்றவன் என்ற முறையில் இந்த நூலைத் தொகுத்து வழங்கும் நல்வாய்ப்பு, எனக்குக் கிடைத்த பெரும்பேறு எனக் கருதி, அந்தக் கலை மேதைக்கு அஞ்சலி செலுத்துகிறேன்

நாடகப் பயிற்சிப் பள்ளிகளே அமைத்து நிரந்தர நாடகக் குழுக்களை உருவாக்கத் துணைபுரிய வேண்டும் என்பது மாண்புமிகு தமிழக முதல்வர் மக்கள் திலகம் திரு. எம். ஜி. ஆர். அவர்களின் திட்டம். அத்தகைய சிறந்த பயிற்சிக்கு உகந்த எளிய இனிய, கலை நூலாக இது பயன்