பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

படும். படிப்பிலும் நடிப்பிலும் துடிப்புள்ள இளம் உள்ளங் களுக்குப் பிடிப்புள்ள நூல் இது.

மாணவ மணிகள் மட்டுமன்றிக் கலையன்பர்கள் அனை வரும் கரும்பாக விரும்பிப் படிக்கும் கருத்துக்கள் நிரம்பிப் பெரும் பயன் வழங்கும் நூலாக இது விளங்கும்.

அமரர் தி. க. அவ்வை சண்முக அண்ணுச்சி அவர்களின் அறுபத்தாரும் ஆண்டு பிறந்த நாள் விழாவில் இந்நூல் வெளிவருவது சிறப்புச் சின்னமாகும். சென்னைக் கடற்கரை யில், அவ்வையார் சிலைக்கு நேராக, காமராஜ் சாலையையும் மாநகரின் முதுகெலும்பு போன்ற அறிஞர் அண்ணுசாலையை யும் இணைக்கும் கலைப்பாலம் போன்ற லாயிட்ஸ் சாலைக்கு ‘அவ்வை சண்முகம் சாலை’ என அழகிய பெயர் சூட்டி, ஆணை பிறப்பித்த, மாண்புமிகு தமிழக முதல்வர் பொன்மனச் செம்மல் அவர்களின் பெருந்தன்மையைப் போற்றும் விழாவாகவும் இது அமைகிறது என்று குறிப்பிடுவதும் பொருந்தும்.

திரு. டி. கே. எஸ். அவர்களின் ‘எனது நாடக வாழ்க்கை’ என்ற அரிய பெரிய நூலை அழகுறப் பதிப்பித்து அவரது புகழ் பரப்பிய வானதிபதிப்பக உரிமையாளர்,புத்தக வித்தகர் திரு. திருநாவுக்கரசு அவர்களே இந்த நூலையும் பதிப்பித்து வெளியிட முன்வந்துள்ளது குறித்து நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். இந்த நூலைத் தொகுத்து வெளியிட எனக்கு உறுதுணையாக இசைவு தந்த திரு. டி. கே. எஸ். அவர்களின் குடும்பத்தாருக்கும் நூல் வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்த சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத் தாருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த ஊக்கத்தின் விளைவாக திரு. டி. கே. எஸ். அவர்களின் ‘எனது நாடக வாழ்க்கை இரண்டாம் பாகத்தை உருவாக்கவும் தனிமுயற்சி எடுத்துக்கொள்வோம் என்ற நம்பிக்கையும் ஏற்படுகின்றது.

ಟ್ತಿಲ್ಲ! அன்புள்ள, 87 சிதம்மா எக்ஸ்டென்ஷன் e - - சென்னை-18, புத்தனேரிரா. சுப்பிரமணியம்