பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 குரல்

பயிற்சி

தம்பிகளே தங்கைகளே! கடவுளுடைய படைப்பில் தான் எத்தனை அற்புதங்கள் எண்ணிப் பாருங்கள்!

உங்கள் எல்லோருக்கும் குரல் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? இல்லையே உருவத்தில் எப்படிப் பலகோடி மாறுதல்களைப் பார்க்கிருேமோ, அதேபோல் குரல்களி லும் எத்தனை எத்தனையோ மாறுபாடுகள். ஒருவரு டைய குரலைப்போல மற்றவருடைய குரல் இருப்பதில்லை. கொஞ்சம் கமக்குப் பழக்கமான குரலாக இருந்தால் இது இன்னுருடைய குரல் என்று எளிதாகச் சொல்லிவிடு கிருேமல்லவா?

அது மட்டுமா? ஒருவர் மகிழ்ச்சியோடு பேசுவதை யும், கவலையோடு பேசுவதையும், கோபத்தோடு பேசுவ தையும், சோகத்தோடு பேசுவதையும்கூட அவருடைய குரலேக் கொண்டே காம் தெரிந்து கொள்கிருேம். எனவே குரல் பயிற்சி நாடக மேடைக்கு மிகவும் அவசிய மானது.

குரல் பயிற்சியின் மூன்று சிறப்புகள்

நாடக மேடைக்கு மட்டுமன்று. அரசியல் மேடை களுக்கும் குரல்வளம் அவசியமானதுதான். சங்கீத