பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


வித்துவான்கள், கதா காலட்சேபம் செய்பவர்கள் எல் லோருக்குமே குரல் பயிற்சி இன்றியமையாதது. கல்ல கம்பீரமான குரல் இருந்தால் பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுவதற்குககூடத் துணை செய்யும் குரல் பயிற்சியில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன. கல்ல குரல, பேச்சிலே தெளிவு, கடிப்பு உணர்ச்சி.குரல கம்பீர மாக இருக்கவேண்டும். வார்த்தைகள் தெளிவாக இருக்க வேண்டும். கடிப்பு உணர்ச்சியோடு பேச வேண்டும் இம்மூன்று அம்சங்களும் அமைந்து இருந்தால்தான் ஒரு கடிகனே, அல்லது கடிகையோ நாடக மேடையில் வெற்றி பெற முடியும். குரலுக்காகவே சேர்ப்பதுண்டு

சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பெல் லாம் நாடகங்களில கடிகர்களைச் சேர்க்கும்போது, அவரைப் பாடச் சொல்வோம். அவருடைய குரல் எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொண்டுதான் சேர்த்துக்கொள்வது வழக்கம். பாடத் தெரியாதவர்களே நாடக சபைகளில் பெரும்பாலும் சேர்ப்பதில்லை. சில பேருக்குப் பாட வராது. ஆனல் கம்பீரமான குரல் இருக்கும். அப்படிப்பட்ட சிலர் அபூர்வமாக வரு வார்கள். குரல் வளத்திற்காகவே அவர்களைச் சேர்த்துக் கொண்டு பிறகு காங்களே இசைப்பயிற்சி கொடுத்துத் தயார் செய்வோம்.

அந்த நாளும் இந்த நாளும்

அந்தக் காலத்தில் ஒலிபரப்புக் கருவி (மைக்) இல்லை. நாடகமேடையில் நூறடி தூரத்திற்குக் கேட்கும்படி சத்தம்போட்டுப் பேசவேண்டும். பாடவேண்டும். கத்திக் கத்தி எங்கள் தொண்டை, யெல்லாம் வறண்டுபோய்