பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


விட்டது. நீங்கள் பாக்கியசாலிகள். அந்தத் தொல்லை களெல்லாம் இப்போது உங்களுக்கில்லை. மெதுவாகப் பேசிலுைம் ஒலிபரப்பும் கருவி அதைப் பெரிதாக்கி எல் லோருக்கும் கேட்கும்படியாகச் செய்து விடுகிறது. எவ்வளவு வசதி பாருங்கள்? நீங்கள் பாடத் தெரியாதவ ராக இருந்தாலும் பரவாயில்லை; உங்களுக்காக இன்னெ ருவர் பாடலாம். நீங்கள் பாடுவதைப் போல் வாயசைவு மாத்திரம் கொடுத்தால் போதும். இந்த வழக்கம் சினிமா வில் மட்டும்தான் இருந்தது. இப்போது நாடக மேடைக்கும் இந்த இரவல் குரல் ஏற்பாடு வந்து விட்டது. நீங்கள் பாடத் தெரிந்திருக்க வேண்டிய தில்லை. பேசி நடித்தாலே போதுமானது. பேசுவதற்கும் குரல் வலிவுடையதாக இருக்க வேண்டுமல்லவா? எனவே, என்னதான் ஒலிபரப்பும் வசதிகள் இருந்தாலும் குரல் பயிற்சி மிகவும் அவசியம்.

பயிற்சியினுல் விளையும் பயன்

சில பேருக்குக் குரல் நல்ல வலிவுடையதாக இருக் கிறது. சிலருடைய குரல. கலிவுடையதாக இரு க்கிறது. என்ன செய்வது? நோஞ்சாகை இருப்பவன உடற் பயிற்சி செய்து பலசாலியாகிருன் அல்லவா? அதே போல் கலிவுடைய குரலையும், குரல் பயிற்சி செய்து வலிவுடையதாக ஆக்கிக் கொள்ளலாம்.

ஒரு நோயாளியைப்போல கடிக்கவேண்டும். ஈனக் குரலில் முக்கி முனகிப் பேசுவான்-அப்படி என்று வைத்துக்கொள்ளுங்கள். கோயாளி ஈனக்குரலில் பேசி கடிக்க வேண்டுமானுல் கடிப்பவனுக்கு உண்மையில் உறுதியான வலிவான குரல் இருக்க வேண்டும். அப் போதுதான் அவன் ஈனக்குரலில் பேசுவது நாடக மேடைக்குச் சிறப்பாக இருக்கும்.