பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


கான் பல ஆண்டுகளாக ஒளவையாராக நடித்து வருகிறேன். ஒளவைப்பிராட்டி தொண்டு கிழவி பல்லவா? நானும் கிழவியைப்போல் கடுக்கத்துடன் தான் பேசி வருகிறேன்.

பள்ளிப் பயிற்சி

குரல் பயிற்சியை எப்படித் தொடங்குவது என்று கேட்கிறீர்களா? மிகவும் எளிதான வழி யிருக் கிறது. முதலில் நீங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பாடத்தை வாய்விட்டு உரக்கப் படிக்க வேண்டும். அதுதான் முதல் முயற்சி. முணுமுணுவென்று முனகிக்கொண்டு படித்தால் குரல், வளம்பெருது: சும்மா வெறும் பாடம படிப்பது போல படித்தால் போதாது. நிறுத்திப் படிக்க வேண்டும். தெளிவாகப் படிக்க வேண்டும். உரக்கப் படிக்க வேண்டும். உணர்ச்சி யோடு படிக்க வேண்டும் அப்படிப் படித்தால்தான் இளமையிலேயே குரலை உறுதியுடையதாகவும் தெளி வுடையதாகவும் உணர்ச்சியுடையதாகவும் ஆக்கிக் கொள்ள முடியும்.

மேடையும் ஒத்திகையும்

காடகப் பாடங்களையும் அப்படியே சத்தமிட்டுப் படித்துப் பழக வேண்டும். நாடக ஒத்திகை கடை பெறும்போது மேடையில் பேசுவது போலவே கினைத் துக் கொண்டு உரக்கப் பேச வேண்டும். சிலர் ஒத்திகையில் மெதுவாகப் பேசுவார்கள். பழக்கத்தின் காரணமாக மேடையிலும் அதே குரலில்தான் பேச்சு வரும். உரக்கப் பேசிப் பழகினுல் மேடையிலும் அதே பழக்கம் வரும் அல்லவா? அதற்காகக் கூச்சப்பட