பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

நாடகமும் விடுதலைப் போரும்

விடுதலைப்போர் வளர்த்த இலக்கியங்களிலே, காட கத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆம் நாடக மேடை பாமரமக்களின் பல்கலைக் கழகமல்லவா? இந்தப் பெருமையை, முதலாவதாகப் பெறுபவர்கள் தெருக் கூத்துக் கலைஞர்கள்.

என் சின்னஞ்சிறு பருவத்திலேயே, வெள்ளேயரை எதிர்த்து வீரமுழக்கம் செய்த மாவீரன் கட்ட பொம்மனைச் சிற்றுார்களில் தெருக்கூத்து மேடை களிலே கான் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் பாடல் களைக் கொண்ட கூத்துக்கள் அவை. இடையிடையே, கொச்சை மொழியிலே, சிறு உரையாடலகளும் உண்டு. என்றாலும், பாடல்களே மிகுதியாக இருந்தன. எனவே நாடகக் கலைஞர்களுக்கு முன்னுேடிகளாக, விளங்கிய அந்தத் தெருக்கூத்துக் கலைஞர்களையும், அவா.கள் பாடி, வீரமுழக்கமிட்ட பாடலகளை இபற்றிய பெயர் தெரியாத இலக்கியச் செல்வர்களையும பாராட்டவும், வாழ்த்தவும் நாம் கடமைப்பட்டிருக்கிருேம்.

விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு’ என்னும் பெயரில் சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம், அவர்கள் எழுதிய ஆய்வு நூலொனறு வெளி வந்துள்