பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியுரை

என் தந்தையாரும். டி. கே. எஸ். நாடக சபையின் தலைவருமான முத்தமிழ்க் கலா வித்துவரத்தினம் அமரர் அவ்வை சண்முகம் அவர்கள் நாடகம் பற்றிய தம் கருத்துக் களை, சிந்தனைகளை இந்நூலில் வழங்கியுள்ளார். வானொலி யிலும், பிற இலக்கிய மேடைகளிலும் நாடகம் பற்றி அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் காம் இந்நூலாக வெளிவரு கின்றது. அவருடைய சிந்தனைகளுள் சிலவற்றைத்தாம் இப்போது நூல்வடிவம் தந்திருக்கிருேம். மேலும் பல விளக்க மான அவருடைய கருத்துக்களும், நாடகத்தின் ஒவ்வொரு பிரிவையும் அவர் தனித்தனியே ஆராய்ந்த கட்டுரைகளும் எங்கள் இல்லத்தில் அவருடைய நூலகத்திலே இருக்கின்றன அவற்றையெல்லாம் தொகுத்துப் பெரிய அளவில் வெளியிட முயற்சி எடுத்து வருகிருேம்.

என் தந்தையாரை என்றும் நிழல் போல் தொடர்ந்து அவருடைய வாழ்க்தையில் பல காரியங்களுக்கும், துணைவ ராக நின்று செயலாற்றியவரும், எங்கள் குடும்ப நண்பரு மான ‘கவிஞர்கோ’ புத்தனேரி ரா. சுப்பிரமணியம் அவர் களே மிக்க ஆர்வத்துடனும். ஆக்கத்துடனும் இந்நூலைத் தொகுத்துள்ளார். இம்முயற்சிக்கு அவர் மூலகாரணமாக இருந்து செயலாற்றியமைக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் உளமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிருேம்

என் தந்தையார் எழுதும் எந்த நூலையும் வெளிக் கொணர்வதிலே மிகுந்த அக்கறையும், உற்சாகமும் காட்டும் உன்னதப் பதிப்பாளர் புத்தக வித்தகர்’ வானதி திருநாவுக் கரசு அவர்களே இந்நூலையும் வெளியிடுவது தனிச் சிறப் பாகும். அவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவிக்கிமுேம்,