பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


அன்பதையும் கினைவூட்ட விரும்புகிறேன். திரு. எஸ். வி. வெங்கட்ராமன், திரு. ஜி. ராமனுதன், திரு என். எஸ். பாலகிருஷ்ணன், திரு. எஸ். எம். சுப்பையா காயுடு, திரு. பி. எஸ். திவாகர் இவர்களெல்லாம் நாடகமேடை யிலும் ஒரு காலத்தில் சிறந்து விளங்கியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இன்னும் எத்தனையோ நாடக மேடை நடிகர்கள் திரைப்பட உலகின் பின்னணி இசைக் குழுவில் இடம் பெற்றுப் பிரபலமாக இருந்து வருவதை காம் அறிவோம்.

என் தந்தையார் திரு டி. எஸ். கண்ணுசாமி பிள்ளையுடன் அல்லி பரமேஸ்வர ஐயர் நாடகக் குழுவில் கடித்த திரு. வில்வாத்திரி ஐயரும் மற்றும் சிலரும் கடம் வாசிப்பவர்களாகவும், மிருதங்க வித்வான்களாகவும் விளங்கி வருவது எனக்குத் தெரியும்.

பல ஆண்டுகளுக்கு முன் நாடகம் தெருக்கூத்தாக இருந்து வந்த காலத்திலேயே கஞ்சிரா மான்பூண்டியா பிள்ளை, புதுக்கோட்டை தட்சினமூர்த்திப் பிள்ளை, முதலிய மேதைகளெல்லாம் கூத்து மேடையில் மிருதங்கம் வாசித்தவர்கள் என்பதை அறியும்போது நமக்குப் பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.

மேற்கூறியவற்றை யெல்லாம் கொண்டு பார்க்கும். போது, நாடகமேடை இசையுலகிற்கு அதிலும் சிறப் பாகத் தமிழிசை உலகிற்கு ஏராளமான இசைவாணர் களைத் தந்து உதவியிருக்கிறது என்பதையும் அவர்களில் பெரும்பாலோர் தமிழிசை வளர்ச்சிக்குத் தொடர்ந்து தொண்டாற்றி வந்திருக்கிறார்கள் என்ப தையும் நினைவுபடுத்திக் கொளள வேண்டியது. தமிழிசைச் சங்கத்தின் கடமையாகும்.