பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


விளங்கி வருவதை நினைவுக்குக் கொண்டுவர விரும்பு கிறேன்.

அவர்களிலே சிதம்பரம் திரு. எஸ். ஜெயராமன் முதன்மை பெற்றவர். மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபையிலே பயிற்சி பெற்றவர். அருமையான நடிகர். சிறந்த இசை மேதை. இவர், அங்காளிலே-ாரு கிருஷ்ண லீலா பேசும் படத்தில் கிருஷ்ணனுக நடித்துப் பாடிய பாடல்கள் என் கினைவுக்கு வருகின்றன. அப் போது இவரை எஸ். ஜி. கிட்டப்பாவின் அவதாரம் என்று ரசிகர்கள் வியந்து பாராட்டியது எனக்கு கன் ருக கினைவிருக்கிறது.

திரு. சி. எஸ். ஜெயராமன் தமிழிசை வளர்ச்சியில் மிகுந்த ஆர்வமுடையவர். இசைப் போாசிரியராக இடம் பெறுவதற்கு எல்லா வகையிலும் தகுதி வாய்ந் தவர். அவர் இப்போதும் இசையரங்குகளில் பெரும் புலவராக இருந்து புகழ் பரப்பி வருவதை காம் அறிவோம்.

இதே போன்று தஞ்சை திரு. டி. எம். தியாகராஜன் அவர்களையும் குறிப்பிட வேண்டும். தியாகராஜன் இளமையில் எங்கள் குழுவிலேயே முக்கியப் பெண் வேடதாரியாக விளங்கியவர். பல நாடகங்களில் கதா நாயகியாக நடித்தவர். கடிகராக விளங்கிய காலத் திலேயே மிக அருமையாகப் பாடியவர். அவர் செம் மங்குடி திரு. சீனிவாச ஐயர் அவர்களிடம் பயிற்சி பெற்று இப்போது இசைப் பெரும் புலவராகவும், இசைப் பேராசிரியராகவும் இருந்து வருவதை கான் அறிவேன்.

திரைப் படங்களில் பின்னணி இசைக் குழுவின் இயக்குநராக விளங்கிய பலர், தொடக்கத்தில் நாடகக் குழுக்களிலே பிரபல நடிகர்களாக இருந்தவர்கள்தாம்