பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


வருகின்றன என்பது அவருக்குப் பெருமை அளிப்ப தாகும். ஏகை-சிவஷண்முகனரின் சம்பூர்ண இராமா யணப் பாடல்கள் தென்னிந்திய இசைக் கலைக்கு மகத் தான சேவையைச் செய்துள்ளன என்று சொன்னல் மிகையாகாது. அபூர்வ இராகங்களில் அமைந்துள்ள அப்பாடல்களை யெல்லாம் ‘இராமாயணம் நாடகத்தை கடித்த நாடகக் குழுக்கள் அனைத்துமே கையாண்டு வர்தன என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

சங்கரதாச சுவாமிகள், நாடகங்களுக்கு மட்டு மல்லாது தனிப்பட்ட தோத்திரப் பாக்களும் ஏராள மாகப் பாடியுள்ளார்கள். கருப்புகாமல் கண்பாரையா’ ‘மதுரை நகர்க்கு வாருங்கள்’ , ‘தாயே மீனுட்சி உன் தனயன் வேலனுக் கென்மேல் தயவு செய்யச் சொல் லம்மா’ என்ற பாடலகளைக் கோனேரிராஜபுரம் வைத் தியாகாத பாகவதர் அக்காளில் பாடிக் கொண்டிருந்த தாக மிருதங்க வித்துவான் பழனி முத்தையாப்பிள்ளை சொல்லக் கேட்டிருக்கிறேன். இசை மேதை மதுரை சோமசுந்தரம் அவர்கள், இப்போதும் பாடுவதை கானே கேரில் கேட்டு மகிழ்ந்தேன். “ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினெடு’ என்னும் சங்கரதாசரின் தண்டபாணிப் பதிகப் பாடலை திருமதி கே. பி. சுந்தராம்பாள் அம்மை யார் இன்றும் இசை நிகழ்ச்சிகளில் முதன்மையாகப் பாடி வருகிறார்கள். இவ்வாறு இசையரங்குகளில் பாடு வதற்குரிய சுவாமிகளின் எத்தனையோ பாடல்கள் இருக் கின்றன. அவையனைத்தும் சீரிய கருத்துக்கள் கிறைந்த உருக்கமான பக்திப் பாடல்கள் என்பதைப் பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏறத்தாழ 48 ஆண்டுகளுக்கு முன் “பக்தி ரசக் கீர்த்தனை” என்னும் பெயரால் அச்சில் வெளிவந்த