பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


சுவாமிகளின் நூலுக்கு அவர்களே எழுதியுள்ள முகவுரையில் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“தற்காலம் இசைத் தமிழின் இலக்கண நூல் காணக் கிடைக்காதாயினும் அங்கங்கு சிதறிப் பல நூல்களிலும் உதாரணமாக எடுத்துக் காட்டப்பட்ட சிற்சில சூத்திரங்களையும் வாக்கியங்களையும் ஆதார மாகக் கொண்டு இசைத் தமிழின் பாகுபாடு இத் தன்மையது எனச் சங்க காலப் புலவர்கள் அபிப் பிராயப் பட்டிருக்கின்றனரென்று முன்னுால் உரையாசி ரியர்கள் ஒருவகையாக நியமித்துச் செல்கின்றனர். அக் கியமங்கொண்டு யூகிப்பார்க்கு இசைத்தமிழுருவம் தென்படாதிராது. பதங்களென்றும், ஜா வ ளி களென்றும், கீர்த்தனைகளென்றும், சிந்துகளென்றும், கும்மிகளென்றும், இக்காலம் வழங்கி வருவனவெல்லாம் இதன்பாற் பட்டனவேயாம்...... பாடல் என்பதற்குப் பொருள் தெரியாதவரும், பாடுங் காலம் இதுவாகை யாலும் ‘இப்படிப் பாடியதற்கு விதியென்ன” என்று, கேட்போரில் லாத நிலையுடைமையிலுைம் எவரும் பாடிப் பல வழியிலும் வெளிப்படுத்தி, இசைத் தமிழ் என்னும் பகுதியை மிகுதியும் ஆபாசப்படுத்தலாயினர். அறி வறிந்த முதியரும் அவைகளை அருவருத் தொழித் தனரன்றி, அவைகளைச் சிக்கறுத்துச் செறிவுபடுத்தப் புகுதலில்லாதவராயினர். அது காரணமாக, இக் காலத்தில் கீர்த்தனைகளும் பல தோன்றிச் சந்த வழுவும் தாளச் சோர்வுமுடைய பாடல்கள் மலியலாயின.’

சுவாமிகளின் இந்த முகவுரை அவரது இசைத் தமிழ்ப் புலமைக்கு ஒரு சான்றாகும்.

இசையரங்குகளில் பாடுபவர்களுக்கு இசைப்புலமை மட்டும் இருந்தால் போதாது. ஓரளவுக்கு மொழியிலும்