பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


புலமை பெற்றிருக்க வேண்டும். பொருள் தெரிந்து பாட வேண்டும் அப்போதுதான் இசைப் புலமையோடு பொருளுக்குரிய உணர்ச்சியும் கலந்திருக்கும் அவ்வாறு பொருள் தெரிந்து உணர்ச்சியோடு உள்ள முருகிப் பாடுபவர்கள் மிகச் சிலரேயாவர் பெரும் பாலோர் தமது இசைத் திறமையைக் காட்டுவதிலேயே முழுக் கவனமும் செலுத்திப் பாடலின் பொருளைச் சிதைத்து விடுகின்றனர். இசைக்கு மொழி முக்கியமான தன்று என்று கருதுவதின் விளைவே இது.

சுவாமிகள் தமது முகவுரையில் கூறியுள்ளபடி சந்த வழுவும்-தாளச் சோர்வுமுடைய பொருளற்ற பல பாடல்கள் இன்று இசையரங்குகளிலே பாடப்பெறு கின்றன. பாடுபவர்கட்கு மொழியின் அருமையும் தெரிந்திருந்தால் இந்த நிலை ஏற்படாது. இந்தக் கருத்தை, சுவாமிகள் ஒரு பாடலிலே குறிப்பிடும் அழகைப் பாருங்கள்:

செல்வத்துக்கு காயகியாகிய திருமகளின் தயவுக் காகக் கலைமகளை வேண்டும் பாடல் இது.

“தாயே உன் மாமியைத்

தயவு செய்யச் சொல்வாயே’

என்று பல்லவி தொடங்குகிறது. சரணத்தில்,

“பாவின் கிலை அறியாதவர்கள் பாட்டுப்

பாடுகின்றார் ஊரார் பக்கம் கின்று கேட்டு ஆவல் பரிசளிக்கின்றார் போட்டி போட்டு அத்தனையும் உன்றன் அத்தை விளையாட்டு’

என்று காட்டு கடப்பை அப்படியே மனக்குமுறலோடு வெளியிடுகிறார் சுவாமிகள் திருமகளின் இந்தத் திரு விளையாடல், பாடல் இயற்றுபவரை மட்டும் குறிப்ப