பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


தன்று பாடிப் பரிசு பெறுபவரையும் குறிப்பதாகும். இப்பாடலிலே உள்ள கயத்தைப் பாருங்கள். தகுதி யற்றவர்களுக்குச் சிறப்பும் பரிசும் கிடைக்கிறதாம். இது பொருளின் தெய்வமாகிய திருமகளின் விளையாட் டாம் இதைத் திருமகளிடம். கேட்கவில்லை சுவாமிகள்; கல்வித் தெய்வமாகிய கலைமகளிடத்திலே முறையிடு கிறார், ஆம் அவர்களுக்குத்தானே தெரியும் பாடலின் அருமை .....

வள்ளுவப் பெருந்தகையார் வகுத்த குறள் கெறி யில் சுவாமிகளுக்கு இருந்த அழுத்தமான நம்பிக் கையை அவருடைய நாடகப் பாடல்களிலும், உரை யாடல்களிலும் மட்டுமல்ல, தோத்திரப் பாக்களிலும் காணலாம். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளைப்பற்றி இவ்வளவு தெளிவான கருத்தைச் சொல்லும் நாடகப் பெரும் புலவர் ஒருவர் இருந்தார் என்பதை, திருக்குறளைப் போற்றும் புலவர்களும் இன்றையத் தமிழக அரசும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பது என் ஆசை.

“ அவாவே பிறப்பினும்

வித்தென்று வள்ளுவர் ஆராய்ந்து சொல்லின ரன்ளுே? அந்த ஞான போதம் சிக்தை செய்யாமம் அகற்றி விடுதலும் கன்றாே?”

“ பற்றற்றான் பற்றினைப்

பற்றென்று சொன்னதும் பாவனையுண்மையின் மார்க்கம் பலிக்கும் வழியை விளக்கியதன்றாே பகர்ந்த தெல்லாமவர் திர்க்கம்"