பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


இவ்வாறு குறள் நெறியினை எடுத்துக்காட்டி மக்களுக்கு கல்வழி புகட்டும் சுவாமிகள் இறுதியில் எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி,

“சற்றுஞ் சந்தேகமில்லை குறளாகிய

சாத்திர மொன்றுமே போதும் சர்வ கலாசார ஞானந்தருமது

தன்னைப் படிப்பா யெப்போதும்.”

என்று பாடுகிறர். திருக்குறள் மனித சமுதாயத்திற் குரிய சாத்திரமென்றும், அது ஒன்றே போதும் என்றும் 60 ஆண்டுகளுககுமுன் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்ட சுவாமிகளை காடக உலகும் இசை உலகும் மட்டுமன்று, தமிழ் உலகம் முழுவதுமே போற்றக் கடமைப்பட்டுள்ளது

இதோ, இசையின் பத்தின் சிறப்பினை விளக்கும் ஒரு பாடல்......

“சரிகம பதங்யாம்

எழுசுர கிலை லய சங்கீத சுகமே

பெரிய சுகம்.” இப்பாடல் நாடகங்களில் நாரதர் பாடுவதற் கென்றே எழுதப் பெற்றது. ஆனல், இசையரங்கு களிலும் பாடுவதற்கு ஏற்ற பாடல் இது.

  • செவியுணவுக்கு கிகர்

அவியுணவு மாகாது தேடிலுைம் உவமை

ஓர் பொருள் கிடையாது குவியுமைம் பொறி இசை

கொண்டிடில் விரியாது குரங்காம் மனம் ஒடுங்கும் தாவாது.”