பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79


ராஜா ரவிவர்மா அவர்களின் ம்ாளுக்கர்களில் ஒரு வராகக் கருதப் பெற்ற திரு. ஏ. தேவராஜய்யர் அவர்கள் மிகச் சிறந்த ஓர் ஓவியக் கலைஞர். சி. கன்னையா அவர் களின் காடகக்குழு முதல் எங்கள் நாடகக்குழு வரை தமிழகத்தின் பல நாடகக் குழுக்களில் பணியாற்றி யவர். சிவலீலா, கிருஷ்ணலீலா, கந்தலீலா, மகா பாரதம், இராமாயணம், ஒளவையார் முதலிய காடகங்களுக்கு ஏ. தேவராஜய்யர் எழுதிய அற்புதக் காட்சிகளை அனைவரும் வியந்திருக்கிறார்கள்.

ஓவியர் திரு. கொண்டைய ராஜு தனிச் சி ற ப் பு வாய்ந்த கலைஞர். காங்கள் கடிகர்களாகவிருந்த மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா, பூரீமீன லோசனி பால சற்குண நாடக சபா முதலிய குழுக்களில் இவர் ஓவியக்கலைப் பணியாற்றிப் புகழ் ஈட்டியவர். அழகிய முறையில் கண்கவரும் காலண்டர்கள் வரை வதில் ஒவியர் கொண்டைய ராஜூ தலைசிறந்த ஒருவ ராகக் கருதப பெறுகிரு.ர்.

ஓவியக்கலைப் பேரரசர் திரு. கே. மாதவன் அவர் களே இன்றையத் தமிழகம் கன்கு அறியும். அவர் ஏங்கள் நாடகக்குழுவிலே பல ஆண்டுகள் பணி யாற்றியவர். கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன் அவர் களின் உயிர்த் தோழர் காங்கள் எல்லோரும் இணைந்து வாழ்ந்த அந்த இன்ப நாட்களைப் பற்றி எண்ணும் போது கண்களில் நீர் அரும்புகிறது

‘சந்திரகாந்தா நாடகத்திற்குத் திரு. மாதவன் எழுதிய உயிரோவியங்களை இன்னும் என்னல் மறக்க முடியவில்லை. சந்திரகாந்தாவில் திருக்கள்ளுர் பண்டார சங்கதிகளின் காதற் கிழத்தியர் ஆறுபேர்; ஒவ்வொரு வரும் வெவ்வேறு குலத்தைச் சேர்ந்தவர்கள்; ஆறு