பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


தற்போது திரைப்படக் காட்சி அமைப்புக்களுக்குச் சித்திரம் எழுதுவோர். திரைப்பட விளம்பரங்களுக்கு ஒவியம் வரைவோர் பலரும் நாடகத்துறையிலிருந்தே வந்துள்ளனர். இன்றைய இளம் ஓவியக் கலைஞர்களிற்

பலரும் அவர்களிடம் பயிற்சி பெற்றவர்களேயாவர்.

வட நாட்டு ஓவியர் காலஞ்சென்ற திரு. உசேன் பக்ஷ் முதல், இன்று நம்மிடையே வாழும் தென்கோடியாகிய திருவனந்தபுரம் ஒவியர் திரு. கே. மாதவன் வரை தமிழ் நாடகத்துறைக்குப் பலர் அரும் பணியாற்றியிருக் கின்றனர்.

கா ட் சி அமைப்புக்குப் பேர்போனது திரு. சி. கன்னையா அவர்களின் காடகக்குழு என்பதை எல் லோரும் ஒப்புக் கொள்வார்கள். ஒவியர் உசேன் பக்ஷ் அவர்கள் அந்த காளில் கிருஷ்ண லீலா, இராமா யணம் முதலிய அவரது காடகங்களுக்கு வரைந்த காட்சிகளை இன்றும் பெரியவர்கள் பலர் புகழக் கேட் டிருக்கிறேன்.

குப்பி வீரண்ன அவர்கள் நாடகக் குழுவில் ஓவியர் சுப்பராயலு காயுடு குருகூேடித்ரா நாடகத்திற்கு எழுதிய காட்சிகளைப் புகழாதார் இலர். சி. கன்னையா அவர் களின் பகவத்கீதை நாடகத்திற்கு ஒவியர் சுப்பராயலு நாயுடு எழுதிய அருமையான காட்சிகளை கானே பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். தசாவதாரம் முதலிய நாடகங் களுக்கு ஒவியர் பார்த்தசாரதி நாயுடு வரைந்த அழகிய காட்சிகள் இன்னும் அப்படியே என் மனக்கண் முன் கிற்கின்றன. மதுரை சுப்பையா காயுடு கும்பகோணம் சாமிலால் ஆகியோரின் ஓவியத் திறமையைப் பற்றியும் க்ண்பர்கள் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். -