பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

நாடகம் தந்த

பாடம்

15ாடக வாழ்க்கையில் நான் 1918-ஆம் ஆண்டில புகுந்தேன். இன்னும் இத்துறையிலேயிருந்து என் வாழ்க்கையைக் கழித்து வருகிறேன். ஆரம்பப் பள்ளி யில் இரண்டாம் வகுப்பு வரைதான் நான் படித்தேன் அதற்கு மேல் நான் படித்து, பயின்றது எல்லாம் காட கத்திலேதான்.

நாடகத்துறையில் எனக்கு ஆசிரியராக வாய்த் தவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். எனக்கு:மட்டும் அல்ல; தமிழ் நாடகத் துறைக்கே தலைமையாசிரியராக விளங்கியவர் அவர் அப்பெருமகனுரை குருநாதராகப் பெற்றதை எனக்குக் கிடைத்த பெரும் பேருகக் கருது கிறேன்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாடக வாழ்க்கை எனக்கு எத்தனையோ பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. அதில் முதல் பாடமாக கான் கற்றுக் கொண்டது ஒவ்வொருவருக்கும் அவருடைய தாய் மொழியில் நீங்காத பற்றுதல் இருக்க வேண்டும் என்பதுதான். அந்த நாளில் இந்த மொழியுணர்வு இருந்ததா என்பதை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்