பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


இயல், இசை, நாடகம் என்று தாய்மொழியோடு ஒட்டிய கலையாக நாடகக் கலையைப் பிணைத்திருக் கிறார்கள் நம் முன்னேர், நாடகம் கமக்குப் புராதனமான கலை. இப்படிப்பட்ட பழம்பெரும் கலையில் காடகம், அரங்கம், காட்சிகள், அணிபணிகள், ஒப்பு:இனப் பொருட்கள் எல்லாவற்றிற்கும் கம் தாய் மொழியில் இருந்த சொற்கள் எங்கே போயின என்பது ஆராய்ச்சிக் குரிய ஒன்றாக விருக்கிறது.

ஆங்கிலச் சொற்கள்

அந்த நாளில் சிறுவர்களை கடிகர்களாகக் கொண்ட காடகக் குழுவை பாய்ஸ் கம்பெனி’.என்றுதான் சொல் வார்கள். ஆங்கிலம் படித்தவர்கள் மட்டுமல்ல ஆங்கிலமே அறியாதவர்களும் அ ப்ப டி த் தான் சொல்வது வழக்கம்.

“ராஜபார்ட்”, ‘ஸ்தீரீ பார்ட்’, என்பது ஆண்வேடம் புனைபவரையும், பெண்வேடம் புனைபவரையும் குறிக்கும் சொற்கள். ராஜாவேடம் புனைபவரை ராஜபார்ட் என்று குறிக்கும் போது, ராணி வேடம் புனைபவரை ராணி பார்ட் என்றுதானே சொல்லவேண்டும்? என்ன காரணமோ தெரியவில்லை, ராணிபார்ட் என்று யாரும் சொல்வதில்லை. ஸ்திரி பார்ட் என்பதே அன்று பழக்கத்திலிருந்து வந்தது. காடக நாயகனுகவும் நாயகி யாகவும் வருபவர்களுக்கு அடுத்த படியாக இருக்கும் நடிகரை, செகண்ட் ராஜபார்ட்’, ‘செகண்ட் ஸ்திரி பார்ட் என்று குறித்தார்கள். அதாவது 2வது ராஜா, 2வது ராணி என்பது பொருள். இப்படியே பாலபார்ட், பஃபூன்பார்ட் என்று காடகப் பாத்திரங்களையெல்லாம் “பார்ட் என்ற சொல்லாலேயே குறி த்தார்கள். ffff"|-- கத்தை டிராமா என்றும் நாடக அரங்கைத் தியேட்டர்’