பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&#

என்றும்தான் சொல்வது வழக்கம். சுமார் காற்பது

ஆண்டுகளுக்கு முன் அச்சிட்ட, மேடை நாடகப் புத்த கங்களைப் பார்த்தால் தெரியும். நாடகமென்ற சொலலே.

இராது. டிராமா’ என்று தான் போட்டு இருக்கும். இது

மட்டுமா? கடிக்கும் மேடையை ஸ்டேஜ் என்றும்

ஒப்பனை செய்யும் இடத்தை பவுடர் பிளேஸ்’ என்றும் காட்சிகளை சீனஸ் என்றும் காட்சித் தட்டிகளை

“பிளாட் என்றும், பக்கத் தட்டிகளை சைட் விங்ஸ்’

என்றும் திரைகளை கர்ட்டன் (படுதா) என்றும் பிற

மொழிச் சொற்களாலேயே குறித்து வந்தார்கள்.

காட்சித் திரைகள் எழுதுபவரை ஓவியர் சித்ரிகர்’ என்று அந்த நாளில் சொன்னதே இல்லை. ஆர்ட்டிஸ்ட்” என்றே அழைப்பார்கள் காட்சிகளில் வைதது அழகு செய்யும் சின்னஞ்சிறு துண்டுத் தட்டிகளையெல்லாம் சகந்தவன பிட்ஸ் மலை பிட்ஸ் மேக பிட்ஸ்’ என்றுதான் குறிப்பார்கள். நாடக அரங்கின் வாசல்களை கேட்” என்றும் அனுமதிச் சீட்டு வழங்கும் இடத்தை ‘டிக்கட் ரும் என்றும் விளம்பரத்தாள்களை கோட்டிஸ் என்றும் சுவரொட்டிகளை “வால் போஸ்ட’ என்றும் சொலலு. வார்கள்.

சபையிலிருப்பவர்கள் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தால் அவர்களை அமைதிப் படுத்துவதற்கு வருபவர் சைலன்ஸ் என்றுதான் சொலலுவார். இத்தனைக்கும் மேலாக நாடகம பார்க்கும் மக்கள் தாங்கள் விரும்பிய பாடலை மீண்டும் பட வேண்டு மென்ற விருப்பத்தை ஒன் ஸ்மோர் என்றுதான் சொலலி வெளிப்படுததுவார்கள. நடிகர் யாருககாவது பரிசு வரும்போது அது ‘ மெடல்’ என்ற பெயரோடுதான் வரும், பதக்கமாக வராது.