பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


நடிகர்கள் மேடையில் கின்று கொண்டு எத்தனையோ கதைகளை மக்களுக்கு கடித்துக் காட்டு வார்கள். எத்தனை எத்தனையோ அறிவுரைகளை மக்க ளுக்கு எடுத்துக் கூறுவார்கள். கல்வழி காட்டும் அந்த கடிகர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையைத் துய்மை யாக வைத்துக் கொள்ளவில்லையானல், அவர்களுடைய நாடக உபதேசம் வெறும் பொழுது போக்காக இருக்குமே தவிர மக்களுக்குப் பயன்தராது. இன்று , சொல்லும் உபதேசத்தை விட, அதைச் சொல்பவர் யார் என்பதைத்தான் மக்கள் ஊன்றிப் பார்க்கிறார்கள் எனவே நடிகர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கு வதற்குரிய தகுதியை ஏற்படுத்திக் கொண்டால்தான் மக்களுக்கும், காட்டுக்கும் பயனுடையவர்களாக வாழ முடியும்.

கொடிய குடிப்பழக்கம்

பொதுவாக நாடகக் கலைஞர்களில் குடிப்பழக்கம் உடையவர்கள் பண்டை காளிலிருந்து இன்றுவரை அதிகமாக இருந்து வருகிறார்கள். இந்தக் கொடிய பழக் கத்திலேயே மேதா விலாசம் பெற்ற பல கலைஞர்களின் வாழ்க்கை பாழ்பட்டுப் போனதை காம் அறிவோம். இதற்குப் பிறகும் கலைஞர்கள் திருந்தவில்லையாளுல் அவர்களுடைய அறிவுரைகளாலோ நடிப்புத் திறமை யாலோ காடும் மக்களும் எப்படித் திருந்த முடியும்?

எனக்கு கன்றாக கினைவிருக்கிறது. அந்த நாளில் நான் சிறுவனுயிருக்த காலத்தில் அநேகமாக எல்லா ஊர்களிலும் நாடகக் கொட்டகைக்குப் பக்கத்தில் கள்ளுக்கடை இருக்கும். சில சிற்றுார்களில் கொட்ட கைக்கு உள்ளேயே கள்ளுக்கடை இருந்ததையும்