பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


போது அவர் சிரித்தார். கான் கடிப்பதை அப்படியே காப்பியடித்து கடிக்காதே; நான் செய்வதையும் சொல்வ தையும் கவனித்துக்கொண்டு உனக்கு எப்படி வரு கிறதோ, அப்படியே கடித்துப் பழகு. அதுதான் உனக்கு வளர்ச்சியைத் தரும் என்று கூறினர்.

இந்த அறிவுரையை கடிப்புத் துறையில் ஈடுபடும் ஒவ்வொரு நடிகரும் உறுதியாய் கெஞ்சில் இருத்திக் கொள்ள வேண்டும்.

தியாக வாழ்க்கை

ஐந்தாவது, நாடக வாழ்க்கையில் கான கற்றுக் கொண்ட பாடம், இந்தக் கலை வாழ்க்கை மக்களுக்கெல் லாம் இன்பமளிக்கும் ஓர் உயர்ந்த வாழ்க்கை-தியாக வாழ்க்கை என்பதாகும்.

நாடகக் கலைஞன் தனது கலையின் மூலம் பல்லா யிரக்கணக்கான மக்களை மகிழ்விக்கிருன். அவர்க ளுடைய துயரங்களையெல்லாம் மறக்கச் செய்து களிப் பூட்டுகிருன். பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு இன்னும் பல்வேறு பண்டிகை நாட்கள் எல்லாவற்றி லும் காடகக் கலைஞன் பங்கு கொள்கிருன். ஆனல் அவனுக்கும் மனைவி மக்களுண்டு-அவர்களுடைய இன்ப.வாழ்வையும் கவனிக்க வேண்டுமல்லவா? காடகக் கலைஞனின் வாழ்வில் மனைவியாகவோ. மக்களாகவோ இடம் பெறுவோர்க்கு இந்த இன்ப வாழ்வு எளிதில் கிடைப்பதில்லை. எவ்வளவு வசதியுடைய கலைஞனுக இருந்தாலும் தன் சொந்த வாழ்வை ஓரளவு தியாகம் செய்து விட்டுத்தான் பணிபுரிய வேண்டியவகை இருக்கிருன்,