பக்கம்:நாடகத் தமிழ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

எனத் தோன்றுகிறது. தற்காலத்திலும் சிலர் பாட்டுகளை எழுதிவிட்டு அவைகளுக்கு இசை வல்லாரைக்கொண்டு தக்க ராக தாளங்கள் அமைப்பது வழக்கமாயிருக்கிறது. கோவிந்த நாயக்கர் என்பவருடைய ஏட்டு பிரதிக்கிணங்க இது அச்சிடப்பட்டிருக்கிறது. இதிலுள்ள தருக்களுக்கு ராக தாளங்கள் அமைத்தவர் பொன்னரங்கம் முதலியார் என்பவர்.

(6) குசலவ நாடகம் : இதன் கதை உத்தரராம சரித்திரத்தின் கதையே. இது நாடகமாக ஆடப்பட்டதென்று கூறுவதற்கு, இதில் “சகல ஜனங்களும் பாருங்களேய்யா' என்று எழுதியிருக்கிறதே சான்றாகும். நடை பிழையுள்ளதாயிருக்கிறது. இஃதன்றி இன்னொரு குசலவ நாடகப் பிரிதியும் இருக்கின்றது.

(7) ஜமதக்னி நாடகம்: இது பரசுராமர் கதையை நாடக ரூபமாகக் கூறுவதாகும்.

(8) சவ்வருண நாடகம் : இது சவ்வருணன் எனும் அரசனுடைய புராணக் கதையைக் கூறும் நாடகமாம்.

(9) தக்க நாடகம் : தட்த யாகத்தின் கதையை நாடகமாகக் கூறுவதாகும். இதில் விருத்தங்களும் ராக தாளங்களோடு கூடிய தருக்களும், வசனமும், இருக்கின்றன. இதில் தர்க்கம் என்பதற்கு பதிலாக பாணி என்கிற பதம் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. "மஹா விஷ்ணு பரமசிவனுக்கு சொல் "பாணி" என்று எழுதியிருக்கிறது.

(10) தேரூர்ந்த நாடகம் : இது வரதப்பைய குமாரர் பெருமாளேயர் என்பவரால் இயற்றப்பட்டது. திருவாரூரில் சோழ அரசன் ஒருவன் கன்றின்மீது தேரைச் செலுத்தின குற்றத்திற்காகத் தன் மகன்மீது தன் தேரைச் செலுத்தின கதையை நாடகமாகக் கூறுவது.

(11) பாண்டவர் சூதாட்ட நாடகம்: என்கிற ஒரு ஏட்டுப் பிரதியிருக்கிறது. இது நாடகம் எனும் பெயர் படைத்தாயினும், புஸ்தக அட்டவணையில் நாடகங்களின் கீழ் இதை குறித்திருந்தபோதிலும், இது நாடகமன்று என்றே கூறவேண்டும் புகழேந்திப்புவவரியற்றிய அல்லி அரசாணிமாலை புலந்திரன் தூது முதலிய நூல்களுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/58&oldid=1290153" இலிருந்து மீள்விக்கப்பட்டது