பக்கம்:நாடகத் தமிழ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மனிதர்கள் எல்லாம் ஒவ்வொருவராய் வந்து சேர்ந்த்பிறகு 11 மணிக்கு கூத்து ஆரம்பமானது. கூத்து பார்க்க வந்த கும்பலுக்குக் குறைவில்லை; ஏனெனில் டிக்கட்டென்பதே யில்லை! பார்க்க விரும்புகிறவர்களெல்லாம் வந்து பார்க்கக்கூடும்! முதலில் இரண்டு வண்ணார்கள் தீப்பந்தங்களைக் கையில் பிடித்துக்கொண்டுவந்து நின்றார்கள். இவர்கள் கிராம வண்ணார்களாம். தீப்பந்தம் நாடகம் நடக்கும்பொழுதெல்லாம் பிடிக்க வேண்டிய மிராசு இவர்களுடையதாம். இதற்காகக் கிராமப் பொதுவிலிருந்து இத்தனைபடி நெல் என்று கூலியாம். தங்களிடத்திலிருக்கும் கிழிந்த பழந் துணிகளேக்கொண்டு இவர்கள் தீப்பந்தங்கள் செய்துகொள்ளவேண்டுமாம். பிறகு இரண்டு பெயர் ஒரு வெள்ளைத்துணியைக் குறுக்காக எங்கள் எதிரில் பிடித்துக்கொண்டார்கள், அதன்பின் கூத்தாடிகள் வந்து தின்றுகொண்டு இரண்டு மூன்று நிமிஷ நேரம் தாளங்களைத் தட்டி பிறகு பாட ஆரம்பித்தார்கள், பாட்டு ஒரே கூச்சலாயிருந்தது. ஆயினும் ஆங்காங்கு கேட்ட சில பதங்களைக்கொண்டு விநாயகர் தேசத்திரம், சரஸ்வதி தோத்திரம் என்று அறிந்துகொண்டேன். பிறகு திடீரென்று இதுவரையில் பாட்டுக்குமேல் கூச்சல் போட்டுக்கொண்டிருந்த ஜனக்கூட்டம் சந்தடியற்றதாய்விட்டது, நான் மெல்ல என் பக்கலில் உட்கார்ந்து கொண்டிருந்த எனது நண்பரை என்ன காரணம் என்று கேட்க, இனிமேல்தான் கூத்து ஆரம்பம், கட்டியக்காரன் வரப்போகிறான் என்றார், உடனே குறுக்காகப் பிடிக்கப்பட்டிருந்த திரையின்யின் இருந்து 'கட்டியக்காரன் இதோவந்தான்' என்கிற பல்லவியைப் பாடிவிட்டு, திரையை நீக்கிக் கொண்டு கட்டியக்காரன் வேஷம் பூண்டவன், கையில் பிரம்பொன்றைப் பிடித்துக்கொண்டு தான் பாடும் பாட்டிற்கேற்றபடி அபிநயம் பிடித்து சுற்றி சுற்றி ஆட ஆரம்பித்தான். பிறகு தொப்பைக் கூத்தாடி இம்மாதிரியாகவே வந்து ஆடினான். இவர்களிருவருடைய பேச்சினால் பவழக்கொடி நாடகம் நடக்கப்போகிறதென நாங்கள் அறிந்தோம், அர்ஜூனன் வேடம் பூண்ட முக்கிய வேஷதாரி வந்தான். இவன் தான் இன்னானெனக்கூறி ஆடிவரும்பொழுது பக்கத்திலிருந்த வண்ணார்களும் தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு இவனோடு சுற்றிவந்தனர். இவன் வருவதற்குமுன், திரைக்குப் பின் இருந்து ஒருவன் இவன் வருவதை அடியில் வருமாறு சபையோர்க்குத் தெரிவித்தான். "அகோதெப்படியென்றால்-ராஜாதி ராஜன்-ராஜசேகரன்-ராஜமார்த்தாண்டன்-அர்ஜூன ராஜன் வருகிறவிதம் காண்க, இவன் ஒவ்வொரு பிருதாகக் கூறும்பொழுதெல்லாம் கூட்டமாய் நின்ற மற்ற நடர்கள் ஹோ!-ஹோ! என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/76&oldid=1291946" இலிருந்து மீள்விக்கப்பட்டது