பக்கம்:நாடகத் தமிழ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

குரலுக்குத் தக்கபடி கூச்சலிட்டார்கள். 'அர்ஜுனன் இதே வந்தான் ராஜாதிராஜன் அர்ஜூனன் இதே வந்தான்'; என்னும் பல்லவியாக, அர்ஜூனன் வேஷம் பூண்டவனே ஆடி அபிநயம் பிடித்தான். இங்வாறே ஸ்ரீகிருஷ்ணன், சுபத்திரை, அல்லி, பவழக் கொடி முதலிய முக்கியமான பாத்திரங்கள் வரும்பொழுதெல்லாம். தாங்கள் இன்னாரெனச்சொல்வி தாங்களே அபிநயம்பிடித்து ஆடி விட்டுத்தான் மறுவேலை பார்த்தார்கள். இப்படிச் செய்வதற்கு முக்கிய காரணம், அக்காலத்தில் நாடகக் கதையானது அச்சிடப்படாததாலும், வேஷத்தை மத்திரம் பார்த்து இன்ன நாடக பாத்திரம் என்று அறிவது கடினமாயிருந்ததாலும் போலும், இவ்வழக்கம் தொன்றுதொட்டு வந்தது என்பதற்குச் சந்தேகமில்லை. இந்த வேஷதாரிகளின் உடையைப்பற்றி நாம் அறிவது அவசியம், அர்ஜூனன், ஸ்ரீகிருஷ்ணன், தர்மராஜன், முதலிய ஆண் வேடம் தரித்தவர்கள் காலுக்கு ஜல்லடம் போன்ற உடையை உள்ளே கட்டி, அதற்குமேல் ஸ்திரீகள் அணியும் பாவாடை போன்றதைக் கட்டியிருந்தனர்; அவர்கள் சுத்றி வரும்பொழுது இதுவும் வட்டமாய்ச் சுழலும். புஜகீர்த்தி, கிரீடம், மார்பில் பதக்கம் முதலியன அணிந்திருந்தனர். இவைகளை மரத்தால் செய்து கண்ணாடிக் கற்கள் புதைக்கப்பட்டிருந்தன, இவை தஞ்சாவூரில்தான் இரண்டொருவரால் செய்யப்பட்டு வருகின்றன. ஸ்திரீ வேடம் தரித்த சுபத்திரை, அல்லி. பவழக்கொடி முதலியோர் ஸ்திரீகளைப்போல் புடவை அணிந்து, ஆபரணங்கள் மாத்திரம் மேற்கூறிய மரத்தில் கண்ணாடிகள் புதைத்த அணிகள்தான் அணிந்திருந்தனர். இவ்வேடம் தரித்தவர்களும் ஆண் மக்களாயிருந்தபடியால் தலைக்கு பெண்களைப்போல கேசம் தரிப்பதற்காக, தலையின்மீது கறுப்புத்துணியை இருக்கக்கட்டி, மரத்தாலாகிய முன்கூறிய தலை சாமான், ஜடை நாகம், சூரியப்பிரபை, சந்திரப் பிரபை முதலிய அணிகளை அணிந்திருந்தனர். கட்டியக்காரன் முதல் எல்லா நாடக பாத்திரங்களும் காலில் சலங்கை இல்லாதவர் கிடையாது, கூத்தாடுவதற்கு சலங்கை இன்றியமையாதாகக் கருதப்பட்டதுபோலும். பிறகு நாடகமானது சுமார் மூன்று மணிவரையில் நடந்தது. அப்பொழுதும் பாதிக்கதை முடியவில்லை. (கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கிற படியால் அதை நான் கூறவேண்டியது அவசியமில்லே.) நாடகம் முடியப் பொழுதுவிடியும் என்று எனது நண்பர் கூற, அதுவரையில் கேட்க வேண்டுமென்கிற ஊக்கமிருந்தும் , தூக்கத்தை தவிர்ப்பது கடினமென நான் வந்துவிட்டேன். மொத்தத்தில் தொப்பைக் கூத்தாடியின் அகஸ்யங்கள் கொஞ்சம் ஆபாசமாக இருந்தபோதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/77&oldid=1291637" இலிருந்து மீள்விக்கப்பட்டது