பக்கம்:நாடகத் தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

லும் நாடகமானது மனதிற்குக் கொஞ்சம் திருப்தியைக் கொடுத்ததென்றே நான் கூறவேண்டும். அர்ஜூனன் வேடம் பூண்டவனும் சுபத்திரை வேடம் பூண்டவனும் நன்றாகத்தான் பாடினார்கள். இத்தெருக்கூத்தின் பாட்டில் முக்கியமான விசேடம் என்னவென்றால் பின்பாட்டு என்பதாம். அதாவது ஒவ்வொரு வேஷதாரியும் ஒவ்வொரு அடியாகப் பாடுவான்; அது முடிந்ததும் அதே அடியை பின்புறம் நிற்கும் மற்ற வேஷதாரிகள் கும்பலாய் அதே மாதிரியாகப் பாடுவார்கள். இவ்வழக்கம் மிகவும் புராதனமானதென்பதற்குச் சந்தேகமில்லை. சிலப்பதிகாரக் காலத்திலும் தமிழ்நாடகங்களில் இது உண்டென்பதற்கு ஐயமில்லை. சுமார் இரண்டாயிரம் வருஷமாக நமது தமிழ்நாட்டிலிருந்த இவ் வழக்கம் இப்பொழுதுதான் கொஞ்சம் மாறத் தலைப்பட்டதெனக் கூறவேண்டும். இன்னும் நாடகமாடுவதையே தமது ஜீவனதாரமாகவுடைய நாடகக் கூட்டங்களுக்குள் (Professional Companies) இந்த வழக்கம் பெரும்பாலும் இருப்பதைக் காணலாம். இதற்கு ஒரு முக்கியமான காரணம் பாடும் வேஷதாரிக்கு சிரமத்தைக் குறைக்க வேண்டியிருக்கலாம்: பாட்டில் ஒவ்வொரு அடியாகப் பாடி நிறுத்தி மற்றவர்கள் அதே அடியை பாடுவதானால், முதலில் பாடுபவனுக்கு அவ்வப்பொழுது சிரமப்பரிகாரமாகும். இல்லாவிடின் தனியாக ஒரு இரவு முழுவதும் பாடுவதென்றால் பெருங்கஸ்டமே.

மறுநாள் காலை 8-மணிக்கு இரவில் வேஷம் தரித்தவர்களெல்லாம் அந்தந்த வேஷங்களுடன் நான் இறங்கியிருந்த வீட்டிற்கு வந்தார்கள். என்ன காரணம் என்று எனது நண்பரை வினவ; காலை நாடகம் முடிந்தவுடன், வேஷதாரிகள் கிராமத்தில் வீடுவீடாகபோய் நெல் பணம் முதலியன யாசகமெடுப்பது வழக்கமெனத் தெரிவித்தார்! ஓர் இரவு நாடகம் ஆடுவதற்கு அவர்களுக்கு கிராமப்பொதுவிலிருந்து தற்காலம் கொடுப்பது இரண்டு வராகன் அல்லது ஏழு ரூபாயாம்! அது போதாமையால், அவர்கள் வீடுகள் தோறும் யாசகம் செய்வது அவசியமாகிறதெனத் தெரிவித்தார். இதனில் தமிழ்க் கூத்துகளும் அதில் வேஷம் தரிப்பவர்களும் என்ன கீழ்ப்பட்ட ஸ்திதியிலிருக்கின்றனர் வென்பது புலப்படும். அநேகம் நூற்றாண்டுகளாக இப்படித்தானிருக்க வேண்டுமென்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. இப்படியிருக்க நாடகத் தமிழ் அழிந்ததற்கும், பெரிய புலவர்கள் தமிழில் நாடகங்கள் எழுதாமைக்கும், வேறு காரணம் நாம் தேடவேண்டியதில்லை எனத் தோற்றுகிறதெனக்கு. வீட்டின் வாசலில் வந்து நின்ற வேஷதாரிகளுக்கு என் சத்தியானுசாரம் கொஞ்சம் பணம் கொடுத்து, அவர்களை என் அருகில் வரவழைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/78&oldid=1296417" இலிருந்து மீள்விக்கப்பட்டது