பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

87


சென்னையிலுள்ள தமிழ் வித்வான்களுக்கெல்லாம் அனுப்பி அவர்களிடமிருந்து சாற்றுக் கவிகள் பெற்றேன். அவைகளை யெல்லாம் அவ்வருஷம் வெளிப்படுத்திய முதற் பதிப்பில் சேர்த்து அச்சிட்டேன். இந்த “லீலாவதி-சுலோசனா” நாடகத்தை எழுதிய பொழுது எனக்கு வயது சரியாக 20; அச்சிட்டபொழுது 22 வயதுக்குக் கொஞ்சம் குறைவே. ஏதோ சிறுவன் என்று அசட்டை செய்யாமல் எனக்குச் சாற்றுக் கவிகளையும், நற்சாக்ஷிப் பத்திரங்களையும் கொடுத்து எனக்கு ஊக்கத்தையுண்டு பண்ணின தமிழ் வித்வான்களுக்கும் தமிழ் அபிமானிகளாகிய பெரியோர்களுக்கும் அன்று முதல் இன்றுவரை என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்தி வருகிறேன். இதுதவிர அவர்களுக்கு நான் என்ன பிரதி செய்யக்கூடும்? கருணையுடன் மழை பொழிந்த மேகத்திற்கு, அதன் பலனையடைந்த நெற்பயிரானது என்ன பிரதி செய்யக்கூடும்?

மேற்குறித்தபடி சாற்றுக்கவிகள் அனுப்பியவர்களுள், எனது ஒன்பதாம் வயது முதல் எனக்கு வீட்டில் தமிழ் உபாத்தியாயராயிருந்த வரதாச்சாரியார் ஒருவர்; பச்சையப்பன் ஹை ஸ்கூலில் எனக்குத் தமிழ் உபாத்தியாயராயிருந்த முருகேச முதலியார் ஒருவர்; துரைத்தனக் கலாசாலையில் எனது தமிழ் உபாத்தியாயராயிருந்த கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் ஒருவர்; அக்காலத்தில் கிருஸ்துவக் கலா சாலையென்று பெயர் பெற்ற கல்லூரியின் தமிழ்ப் பண்டிதராகிய சின்னசாமிப் பிள்ளை என்பவர் ஒருவர்; எனக்கு வயதிற் சிறியவராயிருந்த போதிலும் தமிழில் அக்காலத்தில் பிரசித்தி பெற்ற சூரியநாராயண சாஸ்திரி ஒருவர்; இன்னும் அஷ்டாவ தானம் பூவை கலியாணசுந்தர முதலியார், திருமயிலை வித்வான் ஷண்முகம் பிள்ளை அவர்கள், கனகசபை நாயக்கர் முதலியோரும் சாற்றுக்கவிகள் எழுதி எனக்கு அன்போடனுப்பினர். இவைகள் எல்லாவற்றுள்ளும் நான் மிகுந்த அருமையாகப் பாவிப்பது, மூழ்கிப்போகக் கிடந்த தமிழ் மாதின் தௌர்ப்பாக்கிய ஸ்திதியைக் கண்டிரங்கி, கைகொடுத்துக்கரை யேற்றி, முன்பிருந்த உன்னத பதவிக்குக் கொண்டுவர, தன் ஆயுட் காலமெல்லாம், தனது முதுமையையும் கவனியாது உழைத்து வரும். மஹா மஹோபாத்தியாயர் என்கிற பட்டப் பெய்ரைப் பெற்ற, நான் தமிழ்ப் பாஷையைப்பற்றி