பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

424

நாடக மேடை நினைவுகள்


பலமாக வைதார். அவ்வார்த்தையை இங்கெழுதுவதற்கு எனக்கு இஷ்மில்லை) நீதானடா த்யுமத்சேனன்!” என்று உரக்கக் கோபித்துக் கொண்டார். இதையெல்லாம் பார்த்தும் கேட்டுக்கொண்டும் இருந்த சபையோர்கள் கொல் என நகைத்தனர்! இன்னொரு முறை ஷேக்ஸ்பியர் மஹா நாடகக் கவி எழுதிய ஜூலியஸ் சீசர் என்னும் நாடகம் நடிக்கப்பட்ட பொழுது, ஆன்டொனி என்னும் முக்கியமான பாத்திரம் பூண்டவர், தன் பாடத்தைச் சரியாகப் படிக்காமல், பிராம்டர் உதவியால் பேசிக்கொண்டு வந்தபொழுது, ஒரு காட்சியில் அவர் செய்ய வேண்டிய பெரிய உபன்னியாசத்தின் இடையில் அதைக் கேட்ட சில ஜனங்கள் சொல்ல வேண்டிய வார்த்தைகளைப் பிராம்டர் அவர்களுக்கு எடுத்துக் கொடுக்க, அதை அறியாதவராய், தன் உபன்யாசத்தில், அதைக் கேட்ட மாந்தர்கள் சொல்லவேண்டிய வார்த்தைகளையும் சேர்த்து உபன்யாசம் செய்துவிட்டார்! இதை விட்டகலுமுன் இன்னொரு கடைசி உதாரணத்தை எடுத்து எழுதிவிடுகிறேன். எங்கள் சபை வெளியூர் ஒன்றிற்குப் போய் நடித்துக் கொண்டிருந்தபொழுது, மேற்சொன்ன பிரிவைச் சார்ந்த ஒரு ஆக்டர் (அவர் பெயரை இங்கெடுத்தெழுத என் மனம் வரவில்லை) தான் பாட வேண்டிய பாட்டுகளைச் சரியாகப் படிக்காதவராய் அதற்காகப் பிரத்யேகமாக ஒரு பிராம்டரை ஏற்பாடு செய்து வைத்தார். அவர் எடுத்துக் கொடுத்த படியே, ஒரு பாட்டுதான் இருக்கிறது"என்று பதில் உரைத்தார். எனது நண்பர் தான் பாடிக்கொண்டு வந்தபாட்டுடன், “இன்னும் ஒரு பாட்டுதான் இருக்கிறது"என்று, அதையும் ஒரு அடியாகச் சேர்த்துப் பாடிவிட்டார்! இவர், ஜனங்கள் பாட்டின் போக்கில் இதைக் கவனித்திருக்க மாட்டார்கள் என்று எண்ணிய போதிலும், மறுநாள் சிலர் “என்ன உங்களுடைய ஆக்டர் இப்படி ஆபாசம் செய்தார்?” என்று கேட்டது எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது. ஆகவே, நாடக மேடை ஏற விருப்பங்கொண்டிருக்கும் எனது இளைய நண்பர்களையெல்லாம் இதனால் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், முதலில் உங்கள் பாகங்களை நன்றாய்ப் படியுங்கள்; அப்படி எவ்வளவு நன்றாய்ப் படித்திருந்த போதிலும், நாடக தினம் மறுபடியும் ஒருமுறையாவது உங்கள் பாகத்தை மனனம் செய்யுங்கள், என்பதேயாம்.