பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

77


போகிறான்” என்றொருவர் சொன்னார். ‘சாலிலோக்வி’ (soliloquy) என்னும் தனி மொழியானது எவ்வளவு நல்லதாயிருந்த போதிலும் நாடக மேடையில் அதிக நீளமுள்ளதாயிருந்தால் சோபிக்காது என்பதை, சில வருஷங்களுக்குப் பின்தான் தெரிந்து கொண்டேன். பிறகுதான் தனி மொழிகளைக் குறுக்கிச் சொல்லும் சூட்சுமம் அறிந்து கொண்டேன்.

சுப்பிரமணிய ஐயர் வசனமானது ஜனங்களுக்கு நன்றாய்க் கேட்கவில்லையென்று முன்பே குறிப்பித்தேன். இக்குறை இவரைப்பற்றி மாத்திரமன்று, மஹிஷத்தினுடைய சாரீரத்தைப் பெற்ற என்னைப் போன்ற இரண்டு மூன்று நாடகப் பாத்திரங்கள் தவிர மற்றவர்கள் பேசிய எல்லாம் முற்றிலும் சரியாகக் கேட்கவில்லை என்று ஏறக்குறைய எல்லோரும் கூறினார்கள். இது மிகவும் வாஸ்தவமான குறை என்று ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். சாதாரணமாக மேடை மீதேறும் நடர்களில் பெரும்பாலர், தாங்கள் பேசும் வசனம், ஹாலில் வந்திருக்கும் எல்லோருக்கும் கேட்கிறதா என்று கவனிக்கிறதில்லை . இது பெரும் தவறாகும். ஒரு நடன் எவ்வளவு நன்றாய் நடித்த போதிலும், அவன் பேசுவது நன்றாய்க் கேட்காவிட்டால், அதில் என்ன பிரயோசனம்? அதைவிட ஊமையைப் போல் அபிநயம் பிடிக்கலாம். இக்குறையை எனது நண்பர்கள் நன்றாய்க் கவனித்து அகற்றுவார்களாக. முதலில் தங்களாலியன்ற அளவு உரக்கப்பேசக் கற்றுக்கொள்ளவேண்டும். இக்குணம் அநேக விஷயங்களில் அவர்களுக்குப் பிரயோசனத்தைத் தரும். பிறகு சபைகளில் பேசும்பொழுதும், மிகவும் உபயோகமாகும். எப்பொழுதும், உரக்கப் பேசக் கற்றுக்கொண்டு அப்யாசப்படுத்தினால், நமது சுவாசாசயங்கள் (Lungs) மிகவும் பலப்படும். சிறு வயது முதல் நான் உரக்கப்படிக்கவும் பேசவும் அப்யாசஞ் செய்தபடியால், எனக்கு இப்பொழுது 59 வயதாகியும் நான் பேசுவது கேட்கவில்லை என்கிற ஆட்சேபணை இன்றளவும், எந்த நாடக மேடையிலும் கிடையாது.

மேற்கண்ட குறையை நான் எடுத்துக் கூறிய போதிலும் நாங்கள் நாடகமாடிய விக்டோரியா பப்ளிக் ஹாலிலுள்ள குறையையும் எடுத்துக் கூறவேண்டியவனாயிருக்கிறேன். இந்த ஹாலானது, நாடகங்கள் ஆடுவதற்கேற்றபடியிருக்க