பக்கம்:நாடும் ஏடும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டிதர்கள், பேராசிரியர்கள் முதலியோரின் புகழுமுரையைக் கேட்டதனால் தான், நான் கூறுகின்றேன்; சிறிதும் கூச்சமின்றிக் கூறுகின்றேன், நான் தொல்காப்பியம் படித்ததில்லை என்று. தமிழனின் தொன்மைப் பெரு நூலைப்படிக்கவில்லை என்றுதான் கூறுகின்றேன். அது பற்றி நான் சிறிதும் வெட்கப்படவில்லை. வெட்கப்படக் காரணமுமில்லை, வெட்கப்படவேண்டி யதுமில்லை. என்? தமிழே தம் தனம் எனக் கருதும் பற்பல தமிழப் பண்டிதர்களிலேயே அநேகர் தொல்காப்பியத்தை பழுதற நன்குணர்ந்தோர் இல்லை. ஏன் கிடையாது? தொல்காப்பியம், பழம் பெரும் நூல் என்றும், இன்னும் பலவிதமாகவும் புகழப்படுகின்றதேயன்றி அது மக்களுள் சிற்றறிவுடைய மக்களுங் கூடப் புரிந்து கொள்ளக்கூடிய விதமாய் நாட்டிலே, மக்களுடைய மார்க்கட்டிலே வந்து நடமாடவில்லை; நடமாடும்படி செய்ய பெரும் புலவர்கள் விடுவதில்லை; அதற்காகப் பெருமுயற்சி எடுப்பதில்லை என்ற காரணத்தைத்தான் கூறமுடியும்.

தொல்காப்பியத்தைத் தமிழுக்குத் தொண்டு செய்யும் பேரறிவாளர்கள். பெரும் புலவர்கள், பண்டித மணிகள், நாவலர்கள் முதலானோர் சிறு சிறு நூல்களாகத் திரட்டி, சிறு சிறு வெளியீடுகளாக, சிறுசிறு வருவாயுள்ளோரும் வாங்கி வாசித்து வாழ்க்கை வளம்பெற உறுதுணை செய்தல் வேண்டும். அது அவர்தம் கடன். அறிவுக்கேற்ற வேலை, ஆராய்ச்சிக்கேற்ற பணி.

நல்ல தீர்ப்பு

வாழ்க்கையில் நாம் சிறந்த பொருள்களை, வாழ்க்கைக்கு வளமான பொருள்களைச் சிறிதும் வாட்டமின்றிப் பெறமுடியாது. ஓயாத உழைப்பும், சலியாத முயற்சியும் வேண்டும். சான்றாக முத்துக்களைப் பெறவேண்டுமானால் கடலின் கொந்தளிப்பையும்,

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/12&oldid=1547496" இலிருந்து மீள்விக்கப்பட்டது