பக்கம்:நாடும் ஏடும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுறா மீன்களின் உபத்திரவத்தையும் அகற்றி ஆண்மையோடு முத்துக் குளிக்க வேண்டும்; கண்ணைப் பறிக்கும் பற்பலவித ஆபரணங்கள் செய்யத் தங்கம் வேண்டுமானால், பாறையின் வெடிப்பிற்கும் மணலின் சரிவிற்கும் துணிந்த பல்லாயிரவர் பொற்சுரங்கங்களிலே அல்லும் பகலும் அனவரதமும் பாடுபட வேண்டியிருக்கின்றது. அதுபோலவேதான். ஏடுகளிலும், இலக்கியங்களில் சிறந்தவற்றை, நாட்டுக்கு நலம் பயக்கும் ஏடுகளை, மனிதனை மனிதத் தன்மையுள்ளவனாக விளங்கத் தூண்டும் இலக்கியங்களை, அறிவை அகலப் பரப்பும் அந்தாதிகளையடைய முன்னம் பெரிதும் சிறிதுமான பற்பல இடுக்கண்களோடு இடறி மோத நேரிடும். பலரின் பரிதாபத்திற்கும் கேலிக்கும் கண்டனத்திற்கும் உள்ளாக நேரிடும். அவற்றை அறிவாளர் அறமென மதியார். எடுத்த காரியத்தை எதிர்ப்புக்கும் ஏளனத்திற்கும் அஞ்சாமல் புகழ்ச்சிக்கும் பூசலுக்கும் மண்டியிடாமல் தொகுத்து முடிப்பர். அது மனிதர் மனிதருக்கு மனிதத்தன்மையோடு செய்யும் நேரிய செயல்; அதுதான் முறை நல்ல தீர்ப்பு.

திருக்குறள்

நந்தம் தமிழ் நாட்டில் தமிழ்மறையெனப் பல்லோராலும் போற்றப்படும் 'திருக்குறளைத் திருத்தமாக அறிந்தவர் மிகமிகச் சிலர். அத்தகையோரை விரல்விட்டு எண்ணவிடலாம். பலர் அதன் உள்ளுறை என்னவென்பதையும் அறியார். பண்டிதர்களிலும் பலர் அதனைப் பெருமைக்காகப் படிக்கின்றார்களே ஒழியக் கருத்தூன்றிக் கற்பவர் மிகச் சிலரே. நானும் திருக்குறள் அறிவேன் என்று பேசிப் பெருமிதம் அடைவோர் பலராவர். அவர்தம் நிலைகண்டு இரங்கார் எவரே !

போராட்டம்

இலக்கியங்கள் ஏடுகள், மக்களின் மார்க்கெட்டிலே மலிந்து நடமாட வேண்டுமானால், இலக்கியம்

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/13&oldid=1547500" இலிருந்து மீள்விக்கப்பட்டது