பக்கம்:நாடும் ஏடும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறவுரைகேட்டு வாளாயிருப்பதே வணக்கத்திற்கறிகுறி, அன்றிக் குறுக்கே கேட்பது குதர்க்கம்; குறும்புக்காரன் செயல் அது; என்ற கருத்துடையவர்கள் தான் அவர் தம் சீடனாகிச் செம்மை யுறலாம் அவ்விதம் இருந்தும் தப்பித்தவறி எவனாவது சந்தேகம் சரிவரத் தெரியவில்லை; புரியவில்லை என்று கேட்டுவிட்டால் "அப்பா; உனக்கு அந்தப் பக்குவம்--இதனை புரிந்து கொள்ளும் நிலைக்கு நீ இன்னும் வரவில்லை; அந்நிலையை அடைந்த பின்வா; என வாயுறை வழங்குவர். 'எந்நிலை அந்நிலை' என உசாவினால் உறுமுவர் அந்தோ! அந்நிலை அவனருளின்றிக் கிட்டாது. அவனை (கடவுளை)த் தொழு என்று திருவாய் மலர்ந்தருளுவர்.

பழமையில் மூழ்குதல்

பழையன வற்றிற்கு விளக்கம் விருத்தியுரை கூறுதலன்றி வேறு நூல்கள் இந்தக் காலத்திற்கும் கருத்திற்கும் ஏற்றமுறையிலே, நடையிலே செய்து தர இக்காலப் புலவர்களால் முடியாதா? முடியும். ஆனால் அவர்கள் பழையனவற்றைப் புது மெருகிட்டுப் பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைவதே தம் செயற்கருஞ் செயலெனக் கருதுகின்றனர் மக்கள் சிந்தனையைத் தூண்டும் நூல்கள் இயற்றுவதற்கு, மக்கள் வீரம் அடைவதற்கு, நீதியை நடுநின்று நோக்குதற்கு, சாதி பேத சமயச் சண்டைகளை ஒழிப்பதற்கு, பொருளாதார மாறுபாட்டை மடிப்பதற்கு, புத்துலகம் சமைப்பதற்கு, கயமைத்தனமான கண்மூடி கபோதி பழக்க வழக்கங்களை மதத்தின் பேரால், சமயத்தின் பேரால், சாஸ்திரத்தின் பேரால், பழமையின் பேரால் பின்பற்றி, வறுமையில் மடமையில் கண்மூடித்தனத்தில் மக்கள் மருண்டு உழலும் மாயாமார்க்கத்தை வேரறுப்பதற்கு அவசியமானவற்றை அணைந்து பற்று அல்லாததை யகற்றி, எதையும் பகுத்துணர்ந்து பார்க்க வழிகோலும் ஏடுகள் இயற்றினார்களா? இயற்றுகின்றார்களா? இக்கால இலக்கியக் கர்த்தாக்கள் இனியேனும் இயற்றுவார்களா? நாட்டிற்கும் ஏட்டிற்கும் தொடர்பில்லா வகையிலே நாட்டின் இனத்திற்கு இம்மியும் பயன்படாக் காவியங்களும் ஏட்டில் எடுத்தியம்புவது ஒன்றாயும் எண்ணத்திலே வேறாயும் அன்றாட வாழ்க்கையில் நாட்டில் நடப்பது

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/18&oldid=1547536" இலிருந்து மீள்விக்கப்பட்டது