பக்கம்:நாடும் ஏடும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நகரிலே வீட்டிலே நடப்பது என்ன என்பதை ஊர்ந்து உணர்கின்றார்களில்லை.

வீரம் விளைக்கும் காவியங்களும், கற்பின் மாட்சி விளக்கும் கதைகளும் நீதி நடு நின்று நவிலும் நிகண்டுகளும் நந்தம் தமிழ்நாட்டிலே உண்டு என்று உள்ளங் குளிரும் புலவோர் அந்த நிகண்டுகள் அந்த வீரம் விளைக்கும் காப்பியங்கள் மக்களிடை, எத்துணை மலிவாக எளியதாக நிலவுகிறது, நிலவச்செய்கின்றனர். அல்லது மலிவாக எளிதாக இவ்விலக்கியங்களை மக்கள் கடை வீதியிலே நிலவும் நிலைமைதான் நாட்டில் உண்டா என்பது பற்றிக் கனாக் காண்பதும் கடினம். கற்றோரின் கவிதாத் திறனும் ஆராய்ச்சி அறியும் புலமையின் பூஷணமும் சிந்தனையின் சிறப்பும் ஏற்றத்தின் எடுத்துக்காட்டும் மற்றும் எல்லாப் பழங் காவியங்களுக்குப் பதவுரை பகருவதோடு சரி, நிகண்டுகளுக்கு நித்தநித்தம் புத்தம் புதிய உரைகளும் விளக்கங்களும் அள்ளியள்ளித்தெளித்து அதனை எவரும் அறிய முடியாத அகராதி வைத்துத்தான் படிக்கநேரும் பரிதாப நிலைக்கு மக்களை இழுத்துச் சென்று மயங்கவைப்பதே மாண்பு. பழமையோடு அன்றாடம் தோன்றும் புதுமைக் கருத்துக்களை ஒட்ட வைத்து "என்னே எந்தம்

முன்னோர் மூதறிவு" என்று பழமையில் புதுமை கண்டு பூரிப்படைவதே புலமையின் பொக்கிஷம் என்ற நிலைமைதான் இன்று நாட்டிலே நர்த்தனமாடுகின்றது. மக்கள் மருளும் படியான மகா கடின நடையையே பின் பற்றுகின்றனர். பழையனவற்றிற்குக் கூறும் தத்துவார்த்தங்களும் விளக்கங்களும் எளிதிலே புரியாதவை. அவற்றை விளங்கத் தெரிந்துகொள்ள விழைவோர் இப்புலவர் குழாத்தை அண்டுவதே ஆகாத காரியம். ஏன்? இலக்கியம், புலமை எனும் அரியணையிலே அரசோச்சும் செம்மல்கள் பால் ஏதோ சிறிது தெரிந்தவர் செல்வது எளிதல்லவே! மற்றும் தம்மோடு ஒப்பாருடனும் மிக்காருடனுந்தான் வாதம் நிகழ்த்தல், ஆராய்ச்சியுரை ஆற்றல், வினா விடையறுத்தல் முறையென அம் மூதறிஞர் கருதிக் கொண்டிருக்கின்றனர். அதைத் தடுத்துக் கேட்பது ஆகாது. அது ஆசான்--மாணாக்கன்--குரு--சிஷ்யமுறைக்குப் பங்கம் விளைக்கும் செயல். அடக்க ஒடுக்கமாய் ஆசான்

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/17&oldid=1547535" இலிருந்து மீள்விக்கப்பட்டது