பக்கம்:நாடும் ஏடும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொடர்பற்றே செல்லுமானால் மடமைக்கு மண்டியிடும் எடுப்பார் கைப் பிள்ளையாய் ஏங்கித் திரியும் என்பது திண்ணம்.

சான்றாக இன்னும் பழம் பெரும் இலக்கியங்களைப் பெற்றுள்ள கிரீஸ், சைனா தேசத்தைப் பாருங்கள். அந்நாடுகளிலேயுள்ள ஏடுகள் மிகச் சிறந்தவை. தத்துவத்திலே தரணி முழுதும் ஆள்பவை. எனினும் அந்நாடுகள் சிறப்பற்றுச் சீர்கேடுற்றிருப்பதேன் ? இலக்கிய மெல்லாம் இனத்தை மறந்ததுதான் காரணம்; ஏடுகள் எல்லாம் நாட்டின் நிலையை எண்ணாத ஏமாளித்தனத்தினால் தான் என்றால் அது மிகையாகாது. முறை. முற்றும் உண்மைகூட,

வாழ்வையும் தாழ்வையும் வளர்ப்பது ஏடே

நாடு மேன்மையுறுவதும் தாழ்வுறுவதும் ஏட்டிற்கும் நாட்டிற்கும் உள்ள தொடர்பைப் பொறுத்துத்தானிருக்கிறது. நாட்டிலே நலிந்தோர் மிகுதியாயினகாலத்து, ஏட்டில் அவர் தம் வறுமைக்குக் காரணம் கூறாது, இழிவுக்குமருந்து இயற்றாது, பூங்காவையும், கோயிலையும் இளங் காதலரையும், காதல் நெறியையும் அரசரையும் அந்த உலகத்திலே (தேவலோகத்திலே) அநுபவிக்கப்போகும் இன்பத்தையும் பற்றி இணையிலாக் காவியங்கள் எண்ணிறந்தன இயற்றப்படுமேல் அவ்விலக்கியங்களால் எவர்க்கு என்ன பயன் விளையும் ? வறுமையால் வாடும் மக்கள் அதனைப் படித்தால் அவர் தம் வாட்டம் வாடுமா? அன்றி வளருமா? என்று சிந்தியுங்கள் தோழர்களே! அரசபோகம் அதிகமாகுமா? அன்றி அரசர் நாட்டு வறுமையாயினர் வாட்டம் போக்க நாட்டம் உறச்செய்யுமா? அதற்கு வழிகாட்டுமா? வாழ்வில் சலிப்பூட்டுமா அன்றி "முயற்சி திருவினையாக்கும்" என்று முயன்று வாழ்க்கையை வளம்படுத்தி வாழ வகை சொல்லுமா? என்று தான் உங்களைக் கேட்கின்றேன்.

இந்நாட்டு ஏடுகள்

நம் நாட்டு இலக்கியங்களிலே காண்பது ஒன்று. நாட்டிலே நடப்பது பிறிதொன்று. நான் ஊர் சுற்றிச்சுற்றிக்

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/20&oldid=1547538" இலிருந்து மீள்விக்கப்பட்டது