பக்கம்:நாடும் ஏடும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களோ ஏடுகளோ இல்லாமல் போகும். இலக்கியமின்றி நிலைத்திராத மதம் மதமல்ல. அது வெறும் மதந்தான். மக்களுக்குள்ள மதத்தின் எடுத்துக்காட்டுதான் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. இலக்கியமின்றி இலங்கமுடியா மதம் வேண்டாம் நமக்கு. மதமின்றித் திகழ வொண்ணாத இலக்கியமும் வேண்டாம் நமக்கு. இந்த மதப் போர்வையைப் போர்த்துப் போர்த்து மக்களை மடையர்களாக்கிவிடுகின்றன இந்நாட்டு ஏடுகள். இந்த ஏடுகளைப் படித்துப் படித்து மக்கள் வாழ்வைப் பெரிதென எண்ணாது, மகேஸ்வரன் முன் மண்டியிட்டு மாலை பாடினால்மட்டும் போதும்; மண்டபங்கள் கட்டினால்மட்டுப் போதும், திருவிழாக்கள் தினந்தினம் நடத்தினால் தான் நாட்டுக்கு நன்மை என்று நம்பி தம் அறிவு ஆக்கம், சொல், செயல், சிந்தனை, சிறப்பு, ஊக்கம்-உறுதி-உழைப்பு, கல்வி, கேள்வி முதலிய எல்லாவற்றானும் முற்போக்கடைய முற்படாமல் அவைகளை, வீணே, ஆண்டவனின் அற்புத லீலா விநோதங்களைப் படிப்பதிலும், பாடுவதிலும், விழாக் கொண்டாடுவதிலும், காலத்தை, கருத்தைச் செலவிடுகின்றனர். ஸ்தல புராணங்களைப் படித்துப் படித்து ஸ்தோத்திரத்திலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.

மக்கள் மனத்தாலும் நினைக்கொனாத மாசுமிக்க மடத்தனங்களை மகேசுவரனுக்கேற்றி மனங் குழைந்து மகிழ்கின்றனர். கடவுள் பேரால், சாஸ்திரத்தின்பேரால், சாதிமதப் போராட்டங்கள் சர்வ சாதாரணமாய் நாட்டில் நடைபெறுகின்றன. மக்களை மக்கள் மதியாத மனப்பாங்கும் ஒருவனை ஒருவன் தொடாத, தொல்லைதரும் தொட்டில் பழக்கமும், சாதிச் சண்டை, சமயச் சண்டை, கண்மூடி கபோதி வழக்கங்களும் மக்களிடையே மலிந்து கிடக்கக் காரணம் ஏடுகள் எல்லாம் எம்பெருமான் லீலைகளையும் இலக்கியமெல்லாம் இதிகாசங்களையும் புராணங்களெல்லாம் கடவுளரைப்பற்றிய மாயத்தனமான கதைகளையும் எடுத்தியம்பி மக்களின் மதியை மதம் எனும் மாசால் மறைத்து மடித்து மாபாதகஞ் செய்வதல்லால் வேறு காரணமும் உளதோ? கூறுமின்? இவ்விதம் கேட்பதில் குற்றமென்ன தோழர்களே! நாட்டில் நடைபெறும் நாசவேலைகள் எல்லாம், கடவுளை, மதத்தை

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/24&oldid=1547542" இலிருந்து மீள்விக்கப்பட்டது