பக்கம்:நாடும் ஏடும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுங்கள், நாட்டுக்கும் ஏட்டிற்கும் தொடர்பில்லாவிட்டால் நாட்டு மக்களுக்கு வழி காட்டும் வகை யென்னவென்று: இனநலனைக் கருதா இலக்கியப் பணிபால் இனம் இன்புறுமாவென்று. இனத்திற்கு நலம் பயக்கும் ஏடுகளை இயற்றுதலே நம் கடமை. அதுவே நம் வேலை. அதுவே மனித சமுதாயத் தொண்டு. முற்காலத்தில் தமிழன் தன்னலங் கருதாது உழைத்தான் தரணியிலுள்ளோர் தம் நலனுக்காக என்பர். சூதும் வாதும் விருப்பும் வெறுப்பும் அறியான் தமிழன்; மானமே பெரிதென மதித்தான் தமிழன்; கப்பலோட்டினான் தமிழன்; கடாரம் வென்றான் தமிழன்; எவ்வுயிரையும் தன்னுயிர்போல் காத்து வந்தான் தமிழன் என்று புலவர் பெருமக்கள் இஞ்ஞான்று பறை சாற்றுகின்றனர். உண்மை. மேலும் முற்காலத் தமிழர் வாழ்ந்த வகையைக் கூறுங்கால் நமது திரு. வி. கலியாணசுந்தரனார் நடையிலே கூறவேண்டுமானால் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கூறலாம். இவ்வரிய உண்மைகளுக்கு நந்தம் பண்டை இலக்கியங்களிலே தக்க சான்றுகள் உள. ஆராய்ச்சி வல்லுநரின் முற்ற முடிந்த முடிபுகளும் உள. அத்தகைய இலக்கியங்கள் இன்று மக்கள் கடை வீதியிலே மலியாமல், ஏதோ சிற்சில புராண இதிகாசங்களும் ஆண்டவன் அருள் திருவிளைடால்களைப் பாடும் பாசுரங்களும்மட்டும் மலிந்திருக்கக் காரணம் என்ன? ஏன் நம் ஏடுகள் நாட்டிற்கு நன்மை விளைக்கவில்லை. மற்றும் நன்மை விளைத்திலவாயினும் நாசம் விளைக்காமலாவது இருக்கின்றனவா? அதுவும் இல்லை ஏன் இந்த நிலை?

மதம்பிடியா ஏடுகள்

நமது பண்டிதர்கள் இலக்கிய ஏடுகளை மதம் எனும் போர்வையால் மறைத்துள்ளார்கள். இந்த நாட்டு ஏடுகளால் நாட்டுமக்கள் பயனுறவேண்டுமாயின், இந்த நாட்டு மக்கள் நற்பண்புள்ள ஏடுகளைப்பெற்று வாழ்வில் ஏற்றமுற வேண்டுமானால், இந்த மதப்போர்வையைக் கிழித்தெறிய வேண்டும். இந்த மதமெனும் மாசு இலக்கியங்களை விட்டு அகலாமுன்னம் நமக்கு நன்மை பயக்கும் நல்ல இலக்கியங்-

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/23&oldid=1545261" இலிருந்து மீள்விக்கப்பட்டது