பக்கம்:நாடும் ஏடும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யில் தோன்றாது. யாவும் மதப் பயித்தியத்தின் விளைவு தான் எனில் மிகையாகாது. வீட்டிலே ஏடுகள் என வைத்திருப்போர் நம் தமிழ்ப்பண்டிதராவர். அவையும் அவர்தம் சொந்தமல்ல. கலாசாலை நூல் நிலையங்களிலிருந்து இரவலாகப் பெற்றவைதான். (தமிழாசிரியர்கள் தாமே ஏடுகள் வாங்கும் நிலையிலே அவர் வருவாய் நிலை யில்லையென்பதை நாமறிவோம்) அவை அடுக்காக அவர் தம் மனையிலே மாண்புற விளங்கும். அவையாவும் மத நூல்களாகவே விளங்கும். மதம் கலவாத நூல்கள் யாதொன்றும் அவர் தம் மனையில் காணக்கிடக்கா. நூல்களின் அருமை பெருமை தெரியாத பள்ளி நூல் நிலையங்களிலே அவை கிடப்பதை விட நமது இல்லத்தில் இனிது வீற்றிருக்கட்டுமே என்று அவற்றைப் பூரிப்போடு போற்றி வைத்திருப்பர்.

இந்த மத நூல்கள் கடவுளரைப்பற்றிக் கூறும் கருத்துக்கள் முன் பின் முரண்பாடுடையனவாயுளவே. மூடனும் கண்டு ஏளனம் செய்யும் ஏமாற்றங்கள் நிறைந்துள்ளனவே! நீக்ரோவும்கூட தன் கடவுளுக்கு இத்தகைய அநாகரீக, அற்புத, ஆபாச லீலைகள் வேண்டாம் என்று வெறுத்துத்தள்ளும் அளவுக்கு ஆபாசங்கள். ஆசார சீல மென்றும் கடவுள் திரு அவதார லீலை யென்றும் கடவுளரைக் கயமைக் குணத்திற்கு உட்படுத்தியுள்ளனவே இந்த ஏடுகள். இவை வேண்டுமா? அவசியமா என்று எண்ணுங்கள்; சிந்தியுங்கள்; சீர் தூக்கிப்பாருங்கள் தோழர்களே!

இயற்பகைக்குச் சோதனை

முழுமுதற் கடவுள், எம்பெருமான், கயிலைவாழ் கடவுள், பார்வதி சமேதரன், அம்மையப்பன், அர்த்த நாரீஸ்வரன் அருள் திருவிளையாடல்களைக் கேளுங்கள். அவருக்கு அருமருந்தன்னவன் இயற்பகை என்பான். சிவனடியார் கேட்டதை யெல்லாம் இல்லை யென்னாது அவர் கொடுத்து வந்தாராம். அவர் இவன்பால் மாறாக் காதல் கொண்டு அவனருளையே சிந்தித்து வாழ்ந்து வராநின்ற காலையில் சிவனார் புறப்பட்டார் எங்கு? தமதன்பன், இரக்கும் சிவ நேசற்கு இல்லையென்னாதீயும் இயற்பகையின்

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/26&oldid=1547544" இலிருந்து மீள்விக்கப்பட்டது