பக்கம்:நாடும் ஏடும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சதி அநுசூயைக்குச் சோதனை

இன்றேல் சதி அநுசூயைபோல் சற்றுத் தம் அறிவால் அன்பர் (கணவன்) செய்கையையும், ஆண்டவனின் வேண்டுகோளையும் அலசிப்பார்த்திருக்கலாகாதா என்று கேட்கின்றேன். அநுசூயா பதிவிரதாசிரோன்மணி. இரும்புக் கடலையைச் சிற்றுண்டியாக்கித் தரும் பாங்குடைய பத்தினி, விருந்தினரை உபசரிக்கும் உத்தமி. அவர்தம் பெருமை ஏழுலகங்களிலும் எட்டிப்பரவிற்று. அவ்வநுசூயையின் பெருமை தனக்கு இழிவு தருகின்றது; தம் சீரும் சிறப்பும் சிதைகின்றது என்று கருதினர் மும்மூர்த்திகளின் மனைவியர். அழுக்காறு கொண்டனர். ஆகவே தத்தம் துணைவரை ஏவி அநுசூயையின் பெருமையைக் குறைத்துச் சிறுமைப்படுத்தச் சொல்லினர். மூலக்கடவுளர் மூவரும் தத்தம் இல்லக்கிழத்தியின் ஏவலைச் சிரமேற்கொண்டு சென்றனர். அநுசூயையின் வீட்டிற்கு அவர் தம் அன்பர் (கணவர்) அயலே சென்றிருக்கும்போது துறவிகள் போல மாற்றுருக்கொண்டனர். மங்கை நல்லாளை நண்ணினர், பிச்சை கேட்டனர். "தருவேன்" என்றாள் மங்கை. "சரி, எங்கள் இச்சைப்படி பிச்சை இடுவையோ என்றனர் மும்மூர்த்திகள். ஆகா அவ்விதமே உங்கள் இச்சைப்படி பிச்சையிடுவேன்" என்றாள் நங்கை. உடனே மூர்த்திகள் முவரும் "அங்ஙனமாயின் நிர்வாணமாக நின்று நீ எமக்கு பிச்சையிடுக" என்றனர். வந்த விருந்தினரை உபசரித்தல் தன் கடமை மேலும் அவர்கள் இச்சைப்படி பிச்சையிடுவதாகவும் உறுதி கூறியிருக்கின்றாள். எனினும் அநுசூயை அவர்கள் மீது ஐயங்கொண்டாள். அவர்களை நோக்கி "நீங்கள் கேட்டவண்ணம் செய்தல் முறை ஆனால் அது நீதிக்கு முரண்பாடானது, அறிவுக்கு ஒவ்வாதது" என்று மறுத்தாள். உடனே கோபங்கொண்டனர் மும்மூர்த்திகளும். எங்களை யாரென்று நினைத்தாய்; நாங்கள் மும்மூர்த்திகள், சொன்ன சொல்லை மீறினால் நாங்கள் சபிப்போம் உன்னை என்று உறுமி-

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/29&oldid=1547546" இலிருந்து மீள்விக்கப்பட்டது