பக்கம்:நாடும் ஏடும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

னார்கள். மும்மூர்த்திகள் வந்து கேட்கின்றார்களேயென்று மதி தயங்கவுமில்லை; பயங்கொள்ளவுமில்லை; மும்மூர்த்திகள் நீங்களல்ல; மும்மூர்த்திகள் என்று நவின்று நாட்டை நாசம் செய்ய வந்த வேடதாகரிளாகும் நீங்கள்; அல்லது மும்மூர்த்திகளேயாயினும் அறிவு மழுங்கி ஆராய்ச்சி மடிந்து மானமற்றவராய் வந்திருத்தல் வேண்டும். இது கேட்கத் தகுந்தது; இது கேட்கத் தகுதியற்றது என்ற பாகுபாடு அறியா மூடர்களே! உங்களை நம்பேன்" என்று கூறினளாம். சொன்ன சொல் தவறாதிருக்க வேண்டுமல்லவா!

பின்னர் தனது கற்பின் மகிமையால் அவர்களைக் குழந்தைகளாக்கிக் கொண்டு பிச்சையிட்டதாகக் கதை செல்கின்றது. அதன் உண்மை ஒருபுறம் இருக்கட்டும். கடவுளே நேரே வந்து கேட்டபோதும் வாதாடின அந்த அளவுக்காவது இயற்பகாயாரின் மனையாள் கேட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் யாவரும் பக்தியின் பால் சித்தங் கலங்கிச் சீரழிந்து கிடந்தனர். மனைவியைத் தாவென்னும் மாண்புமிக்க மகேஸ்வரனையும் "நிர்வாணப் பிச்சையிடு" என்று கேட்கும் நீதியற்ற கடவுளையும் பாடும் நிகண்டுகளுமா நமக்குத் தேவை? வேண்டவே வேண்டாம்.

திருவிளையாடல்

இதே பரமசிவன் திருவிளையாடற்புராணத்திலே புரிந்துள்ள லீலையைக் காண்போம். தாய்ப்பன்றி இறந்து விட்டது, பன்றிக் குட்டிகள் பசியால் தவிக்கின்றன, கண்டார் முப்புரம் எரித்த பெம்மான். உளமுருகினார், உடனே தாய்ப் பன்றியின் உருவம் தாங்கினார். பன்றிக் குட்டிகளின் பசி தீர்த்தார். அவற்றைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தார். அவற்றைப் பின்னர் பாண்டியனிடம் கொண்டு சென்று ஆண்டு அவன் அவைக் களத்திலே வீற்றிருந்த மந்திரிகளை நீக்கி அவர்களுக்குப் பதிலாக இவைகளை அங்கு

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/30&oldid=1547547" இலிருந்து மீள்விக்கப்பட்டது