பக்கம்:நாடும் ஏடும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுவன் கசபியான்கா நல்ல பிள்ளை தந்தை சொல் தட்டாத தனயன், கடமையை உணர்ந்த பாலன். சண்டையில் கசபியான்காவின் தந்தை உயிர் நீத்தான். இது இச்சிறுவனுக்குத் தெரியாது; திடீரென்று கப்பல் தீப்பிடித்துக் கொண்டது. கப்பலில் உள்ளோர் யாவரும் தமது உயிரைப் பெரிதென மதித்து பலவாற்றானும் உயிர் தப்பி ஓடினர்; பாலன் கசபியான்காவைப் பலர் அழைத்தனர்; அவன் போக மறுத்தான்; தீ நாற்புறமும் அவனைச் சூழ்ந்து கொண்டது: அதுகாலையில் பலரும் அவனை வற்புறுத்தினர் உடன்வருமாறு; அவன் தன் தந்தையின் கட்டளையை மீறி நடக்க முடியாது என்று உறுதி கூறிவிட்டான் அனைவரும் போய்விட்டனர். கசபியான்கா, "தந்தாய்! தந்தாய்! நான் போகலாமா; போகலாமா" என்று பன்முறை கூவினான். தகப்பன் உயிரோடிருந்தா லல்லவா பதில் கிடைக்கும். எனவே தந்தை சொல்லைத் தலை மேற்றாங்கி அவ்விடத்திலே நின்று தீயில் மடிந்தான். தந்தையின்பால் அவன் செலுத்திய அன்பைக் கண்டு பலரும் அவனைப் போற்றினர்; கவிகள் அவனை ஏத்தி ஏத்திப் பாடினர்; அப்படிப்பட்ட கசபியான்காவைப் பற்றி இந்தநாளிலே ஏடுகளிலே பொறிக்கும்பொழுது "கசபியான்கா தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற கடமையைக் கடைப்பிடித்து நடந்து மடிந்தான் ஆனாலும் அவன் தன் கடமையைக் கடைப்பிடித்தானேயன்றிக் கருத்தோடு ஒன்றிச் செய்தானில்லை" என்று கூறப்பட்டிருக்கின்றது. தீயின் வேகத்திலே கடலின் கொந்தளிப்பிலே கப்பல் உடையும் ஓசையின் நடுவிலே தந்தையின் மறுமொழி தனக்கு எட்டாதிருக்கலாம் அன்றித் தன் கூக்குரலும் தந்தைக்கு எட்டாதிருக்கலாம் அன்றி அத்தகைய பேராபத்தினின்றும் தப்ப தந்தை சொல்லை மீறினால் குற்றமில்லையென்று கொண்டிருக்கலாம்; கசபியான்கா கடமையைத்தான் கவனித்தான்; கருத்தோடு கவனிக்கவில்லை; கருத்துக்கே களங்கம் வந்துவிட்டதே என்று முகவுரை தீட்டுகின்றனர்; அதற்கு மேனாட்டிலே இத்-

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/36&oldid=1547554" இலிருந்து மீள்விக்கப்பட்டது