பக்கம்:நாடும் ஏடும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

னவர்கள் என்று கவி தீட்டியிருக்கிறார். ஆண்கள் அழகற்ற விகார உருவினர்; ஆனால் பெண்கள் அழகுள்ள அணங்குகள். இதிலே ஆண்-பெண் பொருத்தம் உண்டா அன்றி நம் நாட்டுத் தற்கால முறைப்படி, காதலின்றிக் கணவன் மனைவியராகச் சேர்க்கப் பட்டாலுங் கூட அவர்கட்குப் பிறக்கும் ஆண்கள் எல்லோரும் அழகற்ற அநாகரிகர்களாயும், பெண்கள் எல்லோரும் அழகுமிக்க அணங்குகளாகவுமா விளங்குவர் என்று சிந்தித்துப் பாருங்கள் இத்தகைய கருத்துக்கள் காலத்திற்கும் நிலைமைக்கும் ஏற்றவாறு மாற்றப்பட வேண்டுமா என்று ஆராய்ச்சி செய்யுங்கள்! உங்கள் அறிவிற்கு வேலை தாருங்கள் தோழர்களே!

பழைய ஏடுகளில் நீதிகள் நிறைந்திருக்கின்றனவாம்; நீதியின்நேர்மை நடுநிலைமை நவிலப்படுகின்றனவாம்; சான்றுகளும் பல பகரப்படுகின்றன; அறவுரை அடிக்கடி அறிவுறுத்தப்படுகின்றது. உண்மை என இக்கூற்றைக் கொண்டாலும் 'நல்ல நீதி' கொண்ட ஏடுகள் எவையெனத் தெரிந்து கோடல் எளிதன்று. நீதியின் தத்துவம் ஓர் நூலில் ஒருவிதமாயும் பிறிதொன்றில் பிறிதோர் வண்ணமாயு மிருக்கின்றன. அவற்றில் நீதியைப்பற்றியே மக்கள் வாழ்க்கைக்கு வேண்டியனவற்றையே கூறும் நூல் திருக்குறளாகும் எத் தேயத்தார்க்கும் எக் குலத்தார்க்கும் ஒப்பமுடிந்த ஓர் நீதி நூலாகும் சிற்சில இடைஞ்சல்கள் நீக்கப்படின்.

மதப் பித்தர்கள் செயல்

இத்தகைய திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் எம்மதத்திலும் சேராத இயல்பினராய்த்தான் இருந்திருக்க வேண்டும். அவரையும் இம்மதப் பித்தர்கள் ஏடுகளிலே "திருவள்ளுவர் மத வாராய்ச்சி" என மகுடமிட்டு ஒவ்வொருவரும் அவரைத் தத்தமது மதத்தைச் சேர்ந்தவரெனக் கொள்கின்றனர். கூசா-

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/38&oldid=1547556" இலிருந்து மீள்விக்கப்பட்டது