பக்கம்:நாடும் ஏடும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மல் கூறுகின்றனர். சான்றுகளாக திருக்குறளிலிருந்து சிற்சில சொற்களையும், சொற்றொடர்களையும் எடுத்துக் காட்டி, இச்சொல் இச்சொற்றொடர் எந்தம் இறைவனைக் குறிக்குமாதலின் தமிழ் மறையை மலர்வித்த வள்ளுவர் எந்தம் மதத்தைச் சார்ந்தவர். என்னே எந்தம் மதத்தின் மாண்பு! திருவள்ளுவரே கொண்ட மதம் எம்முடைய மதமெனில் அதன்பால் குற்றங் காணலுங் கூடுமோ என்று எண்ணி இறும்பூதெய்துகின்றனர். என்னே! இவர்தம் இழிமதி! மதம் கலவாத ஏடு ஒன்றாகிலும் இருந்து, மக்களுக்குப் பயன்படும் நிலையிலிருந்தால் அதனை மதப் புரட்டிலே சிக்க வைத்து மக்கள் அறிவைப் பாழ்படுத்துகின்றார்களே! இவர்தாம் அவைகளிலுள்ள நீதிகளைச் சுவைப்பவராம்! நேர்மையை அனுபவிப்பவராம்! என்னே! இம்மதங்களின் மீளாத் தொல்லை, என்று தணியும் இந்த மடமையில் மோகம் மாந்தர்க்கு அன்றே நாடு நலம் பெறும் நன்னாள்.

நீதி நிலையுடையதா?

தவிர, நீதி நீதி என்று கூறுகின்றார்களே நீதி என்றும் நிலையுடையதா? நிகண்டுகட்குக் கட்டுப்பட்டு நிற்கக் கூடியதா? அல்லவே அல்ல ஒரு காலத்திய நீதி மற்றொரு காலத்தில் மாற்றப்படலாம்; காலத்தையும் கருத்தையும் கொண்டு. நீதி நிலையற்றது, நிலைமைக்கு ஏற்றபடி மாறும். இதுதான் நீதி என்று அறுதியிட்டுக் கூற எவராலும் முடியாது, மறு முறையும் கூறுகின்றேன் ஏடுகளிலே எழுதப்பட்ட நீதிகள் என்றும் நிலையுடையனவல்ல என்று எந்தெந்தச் சமயத்தில் மாறவேண்டுமோ மாற்றப்படவேண்டிய மனப்பண்பு மக்களிடை மலர்கின்றதோ மாற்றித்தான் தீரவேண்டும் என்ற நிலைமை நாட்டில் நீடிக்கிறதோ அன்றெல்லாம் அது மாறும்: மாறிக்கொண்டே வரும்; மாறிக் கொண்டே போகும்.

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/39&oldid=1547557" இலிருந்து மீள்விக்கப்பட்டது