பக்கம்:நாடும் ஏடும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிந்தனையிலே கொண்டு சீர்தூக்கிப் பாருங்கள், அறிவுக்கு ஒத்ததை கொள்ளுங்கள். நாட்டுக்கும் ஏட்டுக்கும் தொடர்பு வேண்டுமா? வேண்டாமா? நாட்டு நலன் கருதா ஏடுகள் நமக்குத் தேவையா? மதங்கலந்த ஏடுகள் மதியை வளர்க்குமா? அன்றி மதியை மறைக்குமா? மடமையைப் போற்றுமா வென்று எண்ணுங்கள். ஆண்டவனின் அற்புத குணங்கள் என்பவை அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு, நாகரீக நாட்டார்க்கு நல்ல குணங்கள் என்றாவது ஏற்படுமா என்றும் கருத்திலே

கருதுங்கள், இலக்கியப் பண்டிதர்களின் இயல்பு நல்ல முறையிலே இருக்கின்றதாவென்று இரவும் பசுலும் பகுத்துணருங்கள். எது முறையோ அதன் வழி நடவுங்கள். எதிர்ப்புக்கு அஞ்சாதீர். ஏளனத்தைக்கேட்டு ஏமாராதீர். மதத்தின் முன் மண்டியிடாதீர். கடவுளைக்கண்டு கருத்தழியாதீர். அறிவே துணை. மானமே மனிதனை மனிதனாக்குகிறது என்பதை உணருங்கள். உலுத்தர் பேச்சை உதறித் தள்ளுங்கள். சமத்துவம் நாடுங்கள். சகோதரத்துவம் கோருங்கள். சாதி மத பேதத்தைச் சாடுங்கள். தோல்வி கண்டு சலிப்புறாதீர். மாற்றார் மமதை கண்டு மனம் மருளாதீர் சிந்தித்து முடிவுக்கு வாருங்கள். அதன் வழி செயலாற்றுங்கள் செம்மல்களே! உங்கள் யாவருக்கும் எனது நன்றி.

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/49&oldid=1546233" இலிருந்து மீள்விக்கப்பட்டது