பக்கம்:நாடும் ஏடும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்று தனியே தயாரியுங்கள் ஆண்டவனை விட்டு அகல முடியாவிட்டால் அதற்காக ஏடுகள் எல்லாம் எம்பெருமானுக்கே அற்பணம் என்ற நிலைமை வேண்டாம். அதை மாற்றுங்கள், அதுதான் நீதி நேர்மை கூட. படித்த இளைஞர்கள் பகுத்தறிவு கொண்டு எதனையும் துருவித் துருவி ஆராய முற்பட்டு விட்டனர். நீங்கள் எத்துணை மண்டலங்கள் தவமிருந்து தத்துவார்த்தங்கள் கண்டு அவர் ஆராய்ச்சியை அலட்சியப் படுத்தியபோதிலும் உமது தத்துவார்த்தம் நிலைக்காது. பாமர மக்களை பகுத்தறிவாளர்களாக்கப் பாங்குள்ள ஏடுகள் எழுதித் தாருங்கள். 'இன்றேல் உலகம் உம்மை மதியாது என்பது எனது துணிவு உண்மை உரை. நாட்டைக் கருதாவிடின், நாட்டின் நலிவு நாளடைவில் உம்மையும் பற்றும். எனவே ஆண்மையோடு அருந்தொண்டாற்ற முன் வாருங்கள். உலகம் உம்மை போற்றும். நாடு உம்மை ஏத்தும். ஆனால் நீவீர் சிலரின் சீற்றத்தைப் பெரிதெனவும் மதவாதிகளின் மமதையை மாலை எனவுங் கருதி மனந்தடுமாறி எங்களுக்கு எதிர்ப் பிரசாரம் செய்யாதிருப்பதே நீங்கள் நாட்டுக்குச் செய்யும் நல்லறமாகும் இதையேனும் நீங்கள் செய்ய முற்படலா மல்லவா?

ஏட்டின் நன்மையைக் கருதி நலமுள்ள ஏடுகளைப் பண்டிதர்கள் இயற்றித் தாராவிடில் நாளடைவில் நாடு இழி நிலையடையும். செவி சாய்ப்பார்களா இலக்கிய கர்த்தாக்கள்; செயலில் இறங்குவார்களா கற்றுணர்ந்த கலா வல்லுநர்கள். எது எப்படியாகிலும் நாம் அபாய அறிவிப்யை அறிவித்துக் கொண்டு அறிவின் வழி யேகுவோம். எதிர்ப்பாரைக் கண்டு பின் வாங்கோம்.

தோழர்களுக்கு வேண்டுகோள்!

மாணவத்தோழர்களே! உங்கள் நேரத்தை நெடுநேரம் எடுத்துக்கொண்டேன். ஏதோ விருந்து கிடைக்குமென்று, வந்தீர்கள். ஆனால் மருந்துதான் கொடுத்துள்ளேன். மருந்து என்றதும் மருளவேண்டாம். மருந்தை உண்டு உணர்வோடு ஒன்றிச் சுவைக்குங்கால் உண்மை தெரியும். கேட்டவற்றைச்

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/48&oldid=1547566" இலிருந்து மீள்விக்கப்பட்டது