உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடும் நாடகமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சந்தனக் கிண்ணம் கந்தன் கையிலே கொடியேந்தியவாறு ஆவேசமுடன் அந்தப் பட்டாளத்தில் பவனி வந்தான். கமலா கூட்டத் துக்குள் ஓடினாள். கந்தனைப் பிடித்து நிறுத்தினாள். கந்த னுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஐயோ கூட்டத்திலே யுள்ள கொள்கை வீரர்கள் தன்னைப்பற்றித் தவறாக நினைக்க, கமலா இடமளித்து விடுவாளோ என்று கலங் கினான். கமலா ஆத்திரத்தோடு கேட்டாள்! « இந்தி எதிர்ப்புக்கு உங்களை யார் போகச் சொன்னது இதைக் கேட்டு கந்தன் விழித்தான். ஆனால் கமலா வார்த்தையை முடிக்கவில்லை இப்போதுதான் முடித் தாள் "என்னை விட்டு விட்டு " என்று. " இந்தி எதிர்ப்புக்கு உங்களை யார் போகச் சொன்னது, என்னை விட்டு விட்டு!" என்ற மொழி கேட்டதும் மூதாட்டி, ஓடிவந்து கமலாவை அணைத்துக் கொண்டாள். மீண்டும் தமிழ் முழக்கம் தொடர்ந்தது. ஊர்வலம் அந்த வீதியைத் தாண்டியது. போலீசார் பாய்ந்தனர், புள்ளிமான் கூட்டத்திலே புலியென! வேட்டுச் சப்தம்,வேதனை ஒலி. 'தமிழ் வாழ்க' என்ற போர்முரசம். அத்தனை பேரையும் சிறைச்சாலைக்கு வாருங்கள் " என வரவேற்றது அதிகாரத் திமிர். கமலாவும் கந்தனும் சிறைச்சாலையிலே "கணவனுக் கும் மனைவிக்கும் திராவிடமே மூச்சு" என்பதை மோக னத்திலே முணு முணுத்துக் கொண்டிருந்தனர். அடக்குமுறை தர்பார் துவண்டது. இந்தி வெறியர்கள் 'இனிப் பலிக்காது நம் முயற்சி' என மிரண்டனர். கட்டாய இந்தி, கடையைக் கட்டினாள்.