மு. கருணாநிதி தமிழர் படை வென்றது. 15 வீரர் உலாப் பாடினர், வீழ்ந்தாள் கள்ளி. கட்டாய இந்தி, கழுதை தேய்ந்து கட்டெறும்பாயிற்று! வென்றது மொழிப் போர். கமலாவும் கந்தனும் தமிழ் காத்த தடந் தோள் களிலே வெற்றிமாலை சூடி, வீட்டுக்குத் திரும்பினர். "வீண் வேலையில் ஈடுபட்டாய், இனி வேலை கிடை யாது உனக்கு" என்ற ஆபீஸ் உத்தரவும் அவனுக்கு முன் வீட்டுக்கு வந்திருந்தது. தாயாரோ, புகையும் எரிமலையாக இருந்தாள். "அம்மா,உனக்கு ஒரு கேடு என்றால் துள்ளியெழ மாட்டேனா நான்! அது போலத்தான் தாயே, தாய் மொழியைப் பழித்தவரை எதிர்த்தேன்; இது குற்றமா அம்மா" என்று அழுதான் கந்தன். மகனைவிட மருமகள் மீது அதிக ஆத்திரம் அந்த மாதாவுக்கு.
வேலையற்ற நிலை. வேலை கிடைக்காத நிலை. வேதனை வாழ்வு. வேலையில்லாத கந்தன் இயக்க வேலையிலேயே முழு நேரமும் ஈடுபட்டான். அந்த ஊர் செயலாளர் அவன் தான். கந்தனைத் தெரியாதார் யாருமில்லை. அவன் புகழ் வளர்ந்தது. ஊரிலே இயக்க சார்பிலே ஒரு பொதுக் கூட்டம். எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டான். சொற்பொழிவாளருக்கு வழிச் செலவுக்கு இருபது ரூபாய் அனுப்பியாக வேண்டும். கூட்டம் நின்றுவிடக் பணம் வசூல் ஆகவில்லை. கூடாதேயென்று துடித்தான். வீட்டிலே நிம்மதி யின்றி அலைந்தான். சிறைச்சாலையிலே கமலாவுக்கு