16 சந்தனக் கிண்ணம் பாதுகாப்புமின்றி உடல் நலம் சரியான உணவும் கெட்டது. அது அது ஏழ்மையின் காரணமாகத் தொடர்ந்தது. டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்கித் தரப் பணமில்லை. வீட்டிலிருந்த வெள்ளிச் சாமான்களையும் விற்றுச் சாப்பிட்டாகி விட்டது. சந்தனக் கிண்ணம் ஒன்றுதான் பாக்கி வெள்ளியிலே! அதை விற்றாவது மருந்து வாங்கிக் கொடேன் என்றாள் தாயார். அவனுக்கு அதை விற்க மனம் வரவில்லை. மனைவியின் தோழி யளித்த அந்த சந்தனக் கிண்ணம். ஆகவே மறுத்துவிட்டான். இப்போது சொற்பொழி வாளருக்கு அனுப்பப் பணம் இல்லையென்றதும் அவன் விழிகள் அந்தக் கிண்ணத்தைத் தேடின. நோயுற் றிருந்த கமலா தூங்கிக்கொண்டிருந்தாள். கைகள் நடுங்க, கந்தன் சந்தனக் கிண்ணத்தை எடுத்தான். அடகு வைத்துப் பெற்ற பணத்தைச் சொற்பொழி வாளருக்கு அனுப்பினான்.
கூட்டம் குறிப்பிட்டபடி ஏற்பாடாகியது. புகை வண்டி நிலையத்துக்கு கந்தன் புறப்பட்டான் சொற் பொழிவாளரை வரவேற்க! அப்போது அவன் தாய் கமலாவைத் திட்டிக்கொண்டிருந்தாள். கூர்ந்து கவனித் தாள். சந்தனக் கிண்ணத்தை கமலா தொலைத்துவிட்டாள் என்பதுதான் தாயின் குற்றச்சாட்டு. காய்ச்சலோடு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் கமலா, எதுவும் பேசா மல் அழுது கொண்டிருந்தாள். தன் அருமை விஜயா காணாமற் போய்விட்டதை நினைத்துக் கண்ணீர்விட் டாள். தன் கண்களைத் துடைத்துக் கொண்டு கந்தன் புகைவண்டி நிலையத்திற்கு ஓடினான். புகைவண்டி வந்தது, ஆனால் கூட்டத்திற்கு வரவேண்டிய சொற்